பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 172 تحجيصحح காதலும் பெருங்காதலும் நீ ஏன் திரும்பி வந்தாய்? அறம் என நிற்கும் இராமன் பால் நீ சேர்ந்து விட்டாய். பாவங்களின் பிரிவுகளாகிய திரிபு, ஐயம், அறியாமை ஆகியவற்றையும் மற்றும் தீமை என்பவை அனைத்தையும் இம்மையிலேயே நீக்கிய செல்வனே பிறன் மனை நாடிய எங்களிடம் உறவு கொள்ள வரலாமா?’’ ‘'நீதியும், தருமம் நின்ற நிலைமையும், புலமைதானும், ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய், வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்! சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய்!” எல்லோருக்கும் இறைவனான இராமனும், அவன் தம்பியும் மற்றவர்களும் வெற்றியும் நிற்கும்.இடத்தை விட்டு கூற்றமும் எம்மைக் கொல்லும் விதியும்தோல்வியும் நிறைந்த எங்கள் பக்கம் ஏன் வந்தாய்? 'அய்ய நீர் அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி அங்கே உய்கிலை என்னில் மற்று இவ் அரக்கராய் உள்ளோம் எல்லாம் எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால், கையினால் எள் நிர் நல்கிக் கடன் கழிப்பாரைக் காட்டாய்?” ஈமக்கடன் செய்ய யார் இருக்கிறார்கள். எனவே நீ ஏன் இங்கு வந்தாய். எனவே நீ இங்கு வர வேண்டாம். 'வருவதும் இலங்கை மூதூர்ப் புலையெலாம் மாண்ட பின்னைத் திருவுரை மார்பனோடும் புகந்து, பின் என்றும் தீராப் பொருவரும் செல்வம் துய்க்கப் போதுதி விரைவின், என்றான் கருமம் உண்டு உரைப்பது என்றான், உரை! எனக் கழறல் உற்றான்' என்று விரைவில் தன்னை விட்டுப் போகும்படி கும்பகருணன் வீடணனைக் கேட்டுக் கொள்கிறான். வீடணன், கும்பகருணனிடம், ஒரு செய்தியை உன்னிடம் சொல்லி உன்னை என்னுடன் அழைத்துப் போவதற்காக வந்தேன். இராமன் உனக்கும் அபயம் அளிப்பான். “எனக்கு அவன் தந்த செல்வத்து, இலங்கையும் அரசும் எல்லாம் நினக்கு நான் தருவன்; தந்து, உன் ஏவலில் நெடிது நிற்பேன்; உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன் மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு! வாழி!'