பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 173 'தீயவை செய்வர் ஆகில், சிறந்தவர், பிறந்த உற்றார், தாய் அவர், தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்? நீ நீ அவை அறிதி அன்றோ? நினக்கு யான் உரைப்பது என்னோ? துயவை துணிந்த போது பழிவந்து தொடர்வது உண்டோ? 'தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர் வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மை தானோ? ஆய்வினை உடையை அன்றே! அறத்தினை நோக்கி, ஈன்ற தாய்வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான்!” என்றெல்லாம் பலவாறு நீதி நெறிகளையும் கருத்துக்களையும் எடுத்துக் கூறி 'வேதநாயகனே உன்னைக் கருணையால் வேண்டிவிட்டான், காதலால், என்மேல் வைத்த கருணையால்; கருமம் ஈதே; ஆதலால் அவனைக்கான அறத்தோடும் திறம்பாது, ஐய! போதுவாய் நீயே! என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்” இவ்வாறு கும்பகர்ணனையும் தன்னுடன் வந்து இராமனுடன் சேரும்படி வீடணன் வேண்டினான். இங்கு தர்மத்தின் பக்கம் சேர்வதா? அதர்மத்தின் பக்கம் நிற்பதா? என்னும் பிரச்சனை எழுகிறது. இதில் தாய், தந்தை, உடன் பிறந்தோர் கூற்றம் என்பதில்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்னும் நீதி நெறி எழுகிறது. தவறு கண்டபோது தாயையே கொன்றனன் தவத்தின் மிக்க பரசுராமன் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. எத்தனை தான் தர்மம் பேசினாலும் தர்மத்தை உணர்ந்திருந்தாலும் கும்பகருணன் தனது நிலையிலிருந்து விலகவில்லை. நான் உன்னுடன் வர முடியாது. நீ இராமனிடம் போ, போய் விடு, அது உனக்குத் தகும் என்று கும்பகருணன் கூறுகிறான். 'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன் தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தியாயின்