பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சீனி * o ΕΥΙΠΤΕΡΕΟΤ 177 சூலம் கொண்டு போரிட்டான். இராமன் அச்சூலத்தை வீழ்த்தினான். கும்பகருணன் இரு கரங்களால் போரிட்டான். இரு கரங்களையும் இராமன் அறுத்தான். அரக்கன் தம்பி இணையில்லா வீரத்துடன் இரு கால்களால் போரிட்டான். அவனுடைய இரு கால்களையும் இராமன் அறுத்தெறிந்தான். நெஞ்சால் தவழ்ந்து கொண்டு போரிட்டான். இராமன் அரக்கனுடைய நாசியையும் காதுகளையும் அறுத்தான். அப்போது அவன் மனம் வருந்தி 'அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ! யான் கய்யும் கால்களும் இழந்தனென்; வேறு இனி உதவலாம் துணை காணேன்; மய்யல் நோய் கொடு முடித்தவா தான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு உய்யுமாறு அரிது’, என்றும் தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயர் உற்றான்” தனது முன்னோன் “காம நோய் காரணமாய் தனது ஆயுளை முடித்துக் கொண்டான். வரம்பின்றி வாழ்ந்த அவனுக்கு இனி உய்வதற்கு வழியில்லை என்று உணர்ந்து மிக்க துயரமடைந்தான் என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். 27. பெண்பால் வைத்த ஆசை நோய் ஒரு பக்கம் இலங்கையின் கோட்டைக்கு வெளியில் போர்க்களத்தில் வாணர வீரர்களுக்கும் அரக்கர் படையினருக்கும் கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது. நிகரில்லாத வீரத்துடன் கும்பகருணப் பெயரினான் பெரும் போர் நடத்திக் கொண்டிருக்கிறான். கும்பகருணன் நடத்திய அக்கடும் போரில் இலக்குவனும் சுக்கிரீவனும் கூட சோர்ந்து விட்டனர். இராமன் தலையிட்டு அவன் விடுத்த சரங்களினால் கும்பகருணன் படிப்படியாக வலுவிழந்து கொண்டிருந்தான். மறுபக்கம் கோட்டைக்குள்ளே இராவணனுக்கு சீதைபால் இருந்த காம நொய் முற்றி அவன் தன் பரிவாரங்களுடன் சீதை இருக்குமிடம்