பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 179 சீதாபிராட்டி அரக்கனை அலட்சியப்படுத்திக் கடுமையாகப் பேசி அவனுக்குப் புத்தி புகட்டி பதிலளித்தான். * "பழி இது பாவம் என்று பார்க்கிலை, பகரத்தக்க மொழியிவையல்ல என்பது உணர்கிலை! முறைமை நோக்காய்! கிழிசிலை நெஞ்சம்! வஞ்சக் கிளையொடும் இன்று காரும் அழிகிலை; என்றபோது என் கற்பு என்னாம்! அறம்தான் என்னாம்!” "ஊண்இலா யாக்கை பேணி, உயர்புகழ் சூடாது, உன்முன் நாண்இலாது இருந்தேன் நல்லேன்! நவை அறுகுணங்கள் என்னும் பூண்ளலாம் பொருத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன்; கண்டாய்” உணவில்லாமல் எனது உடலைப் பேணி, உயர் புகழ் இல்லாமல் உன் முன் நாணமில்லாமல் இருந்தேன். நவை அறு குணங்கள் என்னும் பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தியான எனது நாயகனைக் காண வேண்டும் என்னும் நீங்காத நினைப்பில் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இராமபிரானின் உயிர்தம்பி செருவில் செம்பொன் அனைய இலக்குவன் உன்னைப் போர்க்களத்தில் கொன்று உன் தலைகள் சிந்துவதையும், உன் அரக்கர் குலம் அழியும் கோலத்தையும் காண வேண்டும் என்னும் வேட்கையில் நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் தனக்கு முன் கிடக்கும் காய்ந்த புல் என அரக்கனை அற்பமாகக் கருதி, முறையில்லாதவனே, அறம் மறந்தவனே, வரம்பில்லாதவனே, கட்டுப்பாடு மீறியவனே, என்றெல்லாம் கூறி இராவணனை இகழ்ந்து பேசுகிறாள். சீதையின் வார்த்தைகளைச் செவியுறக் கேட்ட இராவணன் கடும் சீற்றம் கொண்டு என்னைப் போரில் வென்று, அந்தப் பொடி இராமன் உன்னை மீட்டபின் அவனோடு உயிர் வாழலாம் என்று கூறுகிறாயா என்று ஏளனமாகச் சிரித்துவிட்டு, 'உன் மனதில் உள்ள, அந்த தசரதன் சிறுவனைக் கொன்று அயோத்தியில் உள்ளவர்களையும் கொன்று ஒழித்துக் கட்டுவேன். உன் தந்தை ஜனகனைக் கொண்டுவரக் கூறியுள்ளேன்” என்று கூறி ஒரு மாயாஜாலம் காட்டினான்’ அம்மாயா ஜனகன் இராவணனைப் பணிந்து சீதையிடம் தகாதன பேசினான். அவ்வார்த்தைகளைக் கேட்ட சீதை