பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 18O تدخيصلإح காதலும் பெருங்காதலும் 'அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து ஆவிதள்ளி வீங்கினள் வெகுளி பொங்க, இவ்வுரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணிச் செவ்வுரை அன்று இது, என்னாச் சீறினள், உளையச் செப்பும்” என்ற கூறி அம்மாயா ஜனகனைக் கடிந்து, 'அறம் கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபுக்கு ஆன்ற மறம் கெட, மெய்ம்மை தேய வசைவர மறைகள் ஒதும் திறம் கெட ஒழுக்கம் குன்றத் தேவரும் பேணத்தக்க நிறம் கெட, இனைய சொன்னாய்! சனகன்கொல் நினையின் ஐயா !” “வழி கெடவரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்றோர் கூறும் மொழி கொடுவாழ்வது அல்லால் முறை கெடப்புறம் நின்று ஆர்க்கும் பழிபட வாழ்கிற் பாரும் பார்த்திவர் உளரோ, பாவம் ” என்று கூறி, "நீயும், நின் கிளையும் மற்று இந் நெடு நில வளரப்பும், நேரே மாயினும் முறைமை குன்ற வாழ்வேனோ? வயிரத்திண்தோள் ஆயிரம் நாமத்து ஆழி அரியனுக்கு அடிமை செய்வேன் நாயினும் நோக்கு வேனோ, நாண்துறந்து ஆவிநச்சி? என்று கூறி மேலும் இராவணனையும் கடிந்து எனது நாயகன் அம்பிற்கு நீ உன் கிளையோடு இரையாவாய், நீ பிழைக்க மாட்டாய் என்று கோபமாகப் பேசினாள். இந்த சமயத்தில் போர்க் களத்தில் கும்பகருணன் மாண்ட செய்தி தெரிந்து இராவணன் மிக்க கவலையுற்று அந்த இடத்தை விட்டு நீங்கினான்.