பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 181 28. தானமாலை புலம்பல் கும்பகருணன் இறந்தச் செய்தி கேட்டு இராவணன் மிக்க துயரமும் கலக்கமும் அடைந்தான். அப்போது அதிகாயன் என்பவன் முன் வந்து தான் போர்க்களம் சென்று வானரப் படைகளை அழித்து மனிதரைக் கட்டி இழுத்து வருகிறேன் என்று எழுந்தான். அதிகாயன் இராவணனுடைய மகன். தானமாலை அவனுடைய தாய். அதிகாயன் ஒரு மாவீரன். இணையில்லாத சூரன். வல்லமை மிக்க பல படைக்கலங்களைக் கொண்டவன். சிறிய பயிற்சிகளைப் பெற்றவன். அதிகாயன் கடும் போர் புரிந்து கடைசியில் இலக்குவன் கணைகளால் மாண்டான். அதிகாயனும் அவனுடன் சென்ற படை வீரர்களும் அழிந்த செய்தி கேட்டு இராவணன் வருந்தினான். இக்காட்சியை மிக அற்புதமாகக் கம்பன் தன் கவிதைகளில் சித்தரித்து நயம்படக் கூறுகிறார். 'ஏங்கிய விம்மல், மானம், இரங்கிய இரக்கம், வீரம் ஓங்கிய வெகுளி, துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று தாங்கிய தாங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி வாங்கிய கடல் போல் நின்றான் அருவி நீர் வழங்கும் கண்ணான்' என்றும் 'திசையினை நோக்கும், நின்ற தேவரை நோக்கும்; வந்த வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப் பிசையுறும் கையை, மிசை சுறுக்கொள உயிர்க்கும், பேதை நசையிடைக் கண்டான் என்ன நகும்; அழும்; முனியும்; நாணும்' என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். இன்னும், "மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் எண்ணிய உயிர்களெல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும், பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும்; எண்ணிப் புண் இடை எரிபுக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும்’ என்றும் இராவணன் வருந்தி எண்ணமிட்டான். அதிகாயனுடைய தாய், தன் மகன் போர்க்களத்தில் மாண்ட செய்தியைக் கேட்டுப் புலம்புகிறாள். இந்தப் புலம்பல் எல்லோரையும் கொல்வித்தாயே, யார் சொல்வதையும் கேட்க மறுக்கிறாயே, சீதை