பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 182 X->==== காதலும் பெருங்காதலும் மீதான காம வெறி காரணமாய் இன்னும் என்னென்ன நிகழப் போகிறதோ, கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனையும் அம்புக்கு இரையாக்கி நீ எப்படி ஆட்சி நடத்தப் போகிறாய் என்றெல்லாம் இராவணனிடம் கூறுவதாக அழுது புலம்புகிறள். இதைக் கம்பநாடர் மிகவும் அற்புதமான பாடல்கள் மூலம் எடுத்துக் கூறுகிறார், “இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத் தேன்! மந்தரத்தோள் என்மகனை, மாட்டா மனிதன் தன் உந்து சிலைப் பகளிக்கு உண்ணக் கொடுத்தாயே!” 'அக்கன் உலந்தான்! அதிகாயன்தான் பட்டான் ! மிக்கதிறத்து உள்ளார்கள் எல்லோரும் விடினார்! மக்களில் இன்றுள்ளான் மண்டோதரி மகனே! திக்கு விஜயன் இனிஒரு கால் செய்யாயோ!' “ஏதையா சிந்தித்து இருக்கின்றாய்! எண் இறந்த கோதையார் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ! பேதையாய்க் காமம் பிடிப்பாய்! பிழைப்பாயோ! சீதையால் இன்னும் வருவ சிலவேயோ? என்று இராவணனுடைய காமவெறியைக் கண்டிக்கும் முறையில் அழுது புலம்புகிறாள். 'உம்பி, உணர்வுடையான், சொன்ன உரைகேளாய்; நம்பி குலக்கிழவன் கூறும் நலம் ஒராய்; கும்பகருணனையும் கொல் வித்து என் கோமகனை அம்புக்கு இரையாக்கி, ஆண்டாய் அரசு ஐயா !” என்று அழுது புலம்புவதையும் கம்பன் எடுத்துக்காட்டுகிறார். உன்னுடைய தம்பி, அறிவில் சிறந்த வீடணன் சொன்ன நல்லுரைகளை நீ கேட்கவில்லை. நம்பி குலக் கிழவன் உன் பாட்டன் மாலியவான் கூறிய நல்லுரைகளையும் அறிவுரைகளையும் நீ கேட்கவில்லை. இவ்வாறு சீதையின் மீதுள்ள உனது காமத்தால் வீணான போரை சந்தித்துக் கும்பகருணனையும் கொல்வித்து எனது மகன் அதிகாயனையும் மனிதர்களின் அம்புக்கு இரையாக்கி