பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ल கம்பநாடன் காவியத்தில் 184 காதலும் பெருங்காதலும் ‘இவன் பிழைக்கு மேல் படுக்கும் நம் படையை, எண்ண மற்றிலை, அயன்படை தொடுப்பல்” என்று இலக்குவன் இசைத்தான். “ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இவ்வுலகம் மூன்றையும் சுடும், ஒருவனால் முடிகிலது' என்றான் சான்றவன்; அது தவிர்த்தனன், உணர்வுடைத் தம்பி’’ என்று கம்பன் குறிப்பிடுகிறார். பெருநாசம் விளையும் பேராயுதத்தை நாம் முதலில் தொடுக்கலாகாது என்று இராமபிரான் இங்கு குறிப்பிடுவது போர்த் தொழிலிலும் அறம் வழுவாத நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். இக்கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இலக்குவனுடைய இராமனுடைய நிலையை அறிந்து கொண்ட இந்திர சித்தன் களத்திலிருந்து மறைந்து போய், தெய்வ வான்படைக்கலம் தொடுப்பதற்கு முடிவு செய்து இலங்கை புகுந்து அதற்கான வேள்வியைத் தொடங்கினான். அன்றைய போர் முடிந்தது எனக்கருதி இராம இலக்குவர்கள் தங்கள் போர்க் கோலங்களை நீக்கிக் கொண்டனர். வீடணனை உணவு சேகரிக்கவும் இலக்குவனைப் படைகளைக் காக்கும் படியும் கூறிவிட்டு இராமன் கணைகளுக்குப் பூஜை செய்யச் சென்றுவிட்டான். இந்த நேரத்தல் இந்திரசித்தன் போர்க்களத்திற்குத் திரும்பி வந்து இலக்குவன் மீது நான் முகப்படைக்கலத்தை ஏவி அவனையும் வானரப்படைகளையும் சாய்த்து வெற்றிச் சங்கினை ஊதிக் கொண்டு இலங்கை புகுந்துத்தன் தந்தையிடம் சேர்ந்தான். இராமன் ஆயுத பூசை முடித்துத் திரும்பி வந்து பார்க்கும் போது இலக்குவனும் சுக்கிரீவனும், மாருதியும் வீழ்ந்து கிடந்தனர். அதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். பொருமினான். அகம் பொங்கினான். உயிர் முற்று புகைந்தான். மனம் குலைந்தான். தருமம் நின்று தன் கண் புடைத்து வருந்தும்படி சாய்ந்தான். உருமினான். இடியுண்ட ஓர் மராமரம் ஒத்தான். உணர் விழந்தான். மீண்டும் உணர்வு பெற்றுப் புலம்பத் தொடங்கினான். அப்போது,