பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K-\ கம்பநாடன் காவியத்தில் 1 BG - -श्र्-ु–===== காதலும் பெருங்காதலும் பொன் தாழ் குழையாள் தனையின்ற பூமாமடந்தை புலந்து அழுதாள், குன்றா மறையும், தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத பின்றாது உடற்றும் பெரும்பாவம் அழுத, பின்என் பிறர் செய்கை? நின்றார் நின்ற படி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்' இவ்வாறு கம்ப நாடர் தனது இணையற்ற கவிதைகள் மூலம் சீதை அழுததை அவளோடு உலகமெல்லாம் சேர்ந்து அழுத காட்சியைக் குறிப்பிடுகிறார். இவ்வாறு வருந்தி அழுத சீதை விமானத்திலிருந்து இராமன் மீது விழுந்து இறக்கத் துணிந்தாள். அவளைத் திரிசடை என்னும் நல்லாள் கட்டிப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தடுத்தாள். தடுத்து ஆறுதல் கூறினாள். எல்லாம் அவர்களுடைய மாயம். எதற்கும் நீ அம்மா அஞ்ச வேண்டாம்” என்று பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டி எடுத்துக் காட்டி சீதையைத் தேற்றினாள். "மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும், போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும், நீ அமா நினையாய் மாள நினைத்தியோ! நெறியிலாரால் ஆயமா மாயம்; ஒன்றும் அஞ்சலை; அன்னம் அன்னாய்!” என்று திரிசடை சீதைக்குத் தேறுதல் கூறினாள். இன்னும் திரிசடை, சீதையின் கற்பின் வலிமை அரக்கர்களின் பாவச் செயல்கள், இராமனுடைய வீரம், மாருதியின் சாகா நிலை முதலிய பல விவரங்களையும் எடுத்துக் கூறி அவளுக்கு தைரியமூட்டினாள். உணவு தேடச் சென்ற வீடணன் அவ்வேலையை முடித்துக் கொண்டு போர்க்களத்தை அடைந்தான். எல்லோரும் உணர்வற்றுக் சாய்ந்துக் கிடப்பதைக் கண்டுத் திடுக்கிட்டான். நான் முகன் படையால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். அனுமனைக் கண்டான். அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்தான். அவனுடைய உடம்பு சிலிர்த்தது. கண்கள் விழித்தன. இராம நாமத்தை ஐபித்தான் வீடணன் அழுகையோடு உவகையும் கொண்டான்.