பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் == காதலும் பெருங்காதலும் ኣ: \' | ] ] அனுமன் வேற்றுருவில் வந்து இராமனையும் இலக்குவனையும் சந்திக்கிறான். மாருதியைக் கண்டவுடன் இராமன் தனக்கு ஏற்பட்ட எண்ணத்தை நினைத்து, “மாற்றம் அஃது உரைத்த லோடும் வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறிர் ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடில்லை யாம்; என விளம்பால் உற்றான்” என்றும் "இல்லாத உலகத்தெங்கும், இங்கிவன் இசைகள் கூறக் கல்லாத கலையும், வேதக் கடலுமே; என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே; யார் கொல் இச்சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளையவீர விரிஞ்சனோ! விடை வல்லானோ?” என்று தன் இளவலிடம் கூறுகிறான் “மறைகளாலும் அறிவாலும் அறிய முடியாத பொருளே, குரங்கு உருக்கொண்டு நிற்கிறது’ என்று கூறி வியப்படைகிறான். சுக்கிரீவன், இராமனையும் இலக்குவனையும் நேரில் கண்டான். “நோக்கினான் நெடிது நின்றான்; நொடிவரும் கமலத்து அண்ணல், ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று காறும் பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி மேக்குயர் தடந்தோள் பெற்று வீரராய் விளைந்த என்பான்” பின்னர் “தேறினான், அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறி இப்பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி; மன்னோ ஆறு கொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி வேறுளகுழுவை யெல்லாம் மானுடம் வென்றது அன்றே’’ என்று சுக்கிரீவன் எண்ணினான் என்று கம்பன் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இராமாயணப் பெருங்கதையில் இராமன் சுக்கிரீவன் சந்திப்பு மிக முக்கியமான தொரு நிகழ்ச்சியாகும். இராமன் தலைமையில் வானரப் படை ஒன்று திரளுவதற்கு அடிப்படை வகுத்தும் இந்த நிகழ்ச்சியே யாகும். சீதையைத் தேடி அவள் இருக்கும்மிடத்தைக் கண்டுபிடித்ததும்,