பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 189 30. நிகும்பலை யாகம் இந்திர சித்தனுடைய பிரம்மாஸ்திரம் என்னும் ஏவுகணையால் இராம இலக்குவர்களும் வானரப்படைகளும் சாய்ந்து விட்டனர் என்று கேள்விப்பட்டுத் தகவல் கிடைத்தவுடன் இராவணன் எழுந்து பொங்கித் தன்னையும் கடந்து அளவு கடந்த மகிழ்ச்சியில் மூழ்கினான். கின்னரைக் கீதம் பாடச் செய்து அழகிய மாந்தரை ஆடச் செய்து மகிழ்ந்தான். நெடும் களியாட்டம் கண்டான் 'இன்னது இத்தலையதாக இராவணன், எழுந்து பொங்கித் தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம், கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக் கன்னி நல் மயில் அன்னாரை நெடும் களி ஆட்டம் கண்டான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். “அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர், குரும்பை அம்கொங்கை நாகர் கோதையர், இயக்கர், கோது.இல் கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் வரம்பு அறு சும்மையோர்கள், மயில் குளம் மருள வந்தார்’ - என்றெல்லாம் கம்ப நாடர் குறிப்பிடுகிறார். இவ்வாறு பெரு மகிழ்ச்சியுடன் ஆடல் பாடல்களில் இராவணன் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வானரப்படைகள் உயிர் பெற்றெழுந்து ஆர்ப்பரிக்கும் பேரொலி கேட்கிறது. இராவணன் உடனே தனது சபையைக் கூட்டி மந்திராலோசனை செய்கிறான். மாலியவான் மீண்டும கூறுகிறான். இலங்கையிலிருந்து மேரு மலைக்கே இமைப் பொழுதில் சென்று மருந்துச் செடிகள் நிறைந்த மலையோடும் கொணரவல்லான் அனுமனே ஆதல் வேண்டும். அவர்களுடைய வல்லமை பெரிது. எனவே அந்த ஜானகியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த அறம் தரும் சிந்தையோரை அடைக்கலம் புகுவதே நல்லது என்று கூறுகிறான். "எல்லோரும் போரில் மாண்டனர். இலங்கை ஊரும் சிறுவனும் (இந்திரசித்தனும்) நீயும் அல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள்’’ என்றெல்லாம் மீண்டும் எடுத்துக் கூறுகிறான் மாலி. மாலியவான் அனுபவங்கள் நிறைந்தவன். நிறைந்த கற்றறிந்த ஞானி. இராவணன் சபையில் இருந்தவர்களில் வயதிலும் மூத்தவன்.