பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 190 تحخصح حلا காதலும் பெருங்காதலும் அவன் கூறுவதில் உள்ள உண்மைகளை உணர்வதற்குப் பதிலாக இராவணனுக்குக் கோபமே வருகிறது. குறிப்பாக இராமனைப் பற்றியும் சீதையைப் பற்றியும் கூறும் போதெல்லாம் கடும் கோபம் கொண்டே அவனை மறுத்துப் பேசி வாயடைக்கிறான். “கட்டுரை அதனைக் கேளா, கண் எரிகதுவ நோக்கிப் பட்டனர் அரக்கர் என்னில், படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; நல்கிளி அன்னாளை விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை விய?’’ என்று சீதையின் மீதானபெருங் காதலையும் வெளிப்படுத்தியே பாட்டனை மறுத்துக் கூறுகிறான். மாயச்சீதை இந்திர சித்தன் நிகும்பலையாகம் செய்யத் தீர்மானித்தான். அதற்காகத் தன் தந்தையின் அனுமதியைப் பெற்றான். ஒரு மாயச் சீதையைக் கொண்டு போய் இராம இலக்குவர் முன்பாக வெட்டிக் கொல்ல வேண்டும். அயோத்தியில் உள்ளவர்களையும் அழிக்கப் போகின்றோம் என்று போக்குக் காட்ட வேண்டும். அவர்கள் அயோத்திக்குப் புறப்படுவார்கள். அதற்குள் நான் வேள்வியை முடித்துவிடுவேன்' என்று தந்தையிடம் கூறிவிட்டு ஒரு மாயச் சீதையைக் கொண்டுவந்து வானரப்படை முன்பாக இரக்கமின்றிக் கொன்றான். அயோத்தியில் உள்ளவர்களையும் கொல்வேன் என்று கூறிக் கொண்டு விமானத்தில் வடக்கு நோக்கிச் சென்றான். நிகும்பலையை அடைந்தான். அனுமன் அதைக் கண்ணுற்றுக் கலங்கினான். 'பெரும் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணிற் கொல்ல இரும் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் இரும் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி பட்ட அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது! பெரிதும் அம்மா !” என்று மனம் வருந்தி வேகமாகச் சென்று இராமனிடம் செய்தியைக் கூறினான்.