பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 194 2=> காதலும் பெருங்காதலும் இங்கு வீடணன், பெண்கள் பால் முறை தவறி நடப்பதைப் பொதுவாகவும் கற்பினில் சிறந்த சீதையைத் துன்புறுத்துவதைக் குறிப்பாகவும் கண்டித்துப் பேசுவதைக் காண்கிறோம். இந்திரசித்தன் சினந்து வீடணன் மீது ஒரு சக்தி வாய்ந்த கணையை ஏவினான். அதை இலக்குவன் தடுத்தான். ஒரு வேல் படையை விடுத்தான். அதையும் இலக்குவன் பொடி செய்தான். வீடணன் சினந்தெழுந்து தனது கைத்தண்டால் இந்திரசித்தனது தேர்ப் பாகனையும் குதிரைகளையும் அழித்தான். இந்திரசித்தன் மறைந்து இலங்கைக்கு ஒடி விட்டான். இராவணனை சந்தித்தான். இந்திரசித்தன் சோர்ந்து காணப்பட்டதைக் கண்டு இராவணன் என்ன நடந்தது என்று கேட்டான். நான் எல்லா மாயங்களும் செய்து பார்த்தேன் உன் தம்பி வீடணனே எல்லாவற்றையும் துடைத்து விட்டான். வேள்வியைச் சிதைத்து விட்டார்கள். பிரம்மாஸ்திரம் சக்கராயுதம், பாசுபதம் முதலிய மூன்று வகைச் சக்தி ஆயுதங்களைத் தொடுத்தேன். இலக்குவன் அவைகள் அனைத்தையும தடுத்து விட்டான். திருமால் படையை ஏவினேன். அது அவனை வலம் செய்து திரும்பி விட்டது என்று இன்னும், இலக்குவனுடைய ஆற்றலையும் ஆயுதப் பயிற்சியையும் சுட்டிக் காட்டி, "சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்கச், சுற்றி வேள்வியை சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி, ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி ஆர்க்கும் தாழ்விலாப் படைகள் மூன்றும் தொடுத்தனன், தடுத்து விட்டான்” 'நிலம் செய்து விசும்பும் செய்து நெடியமால் படை நின்றானை வலம் செய்து போவதானால், மற்றினி வலியது உண்டோ? குலம் செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டாய்; சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே.” போரை நிறுத்திக் கொள்ளலாம் அவர்கள் சீற்றம் தணிவர், செய்த தீமையும் பொறுப்பர் என்று கூறினான். இந்திரன் தேவலோக அரசன். அவன், ஒரு மாவீரன். மேகநாதன் அந்த இந்திரனையே போரில் வென்று வெற்றி கொண்டதால் அவன் இந்திர சித்தன் என்று பெயர் பெற்றவன். போர் என்றால் அதன் கலைகள் நுட்பங்கள், மாயங்கள், மந்திரங்கள், தந்திரங்கள், அனைத்தையும் கற்றவன். சக்தி ஆயுதங்கள் அனைத்தையும்