பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 196 حجصح حلا காதலும் பெருங்காதலும் தன்னிகரில்லாத தனி வீரன். இராமனைத் தவிர அவனை வேறு யாராலும் வெல்ல முடியாது. இராமனோ திருமாலின் திரு அவதாரம். இராமன் தனது அவதாரக் கடமையாக தீமையின் வடிவமான இராவணனை வென்று உலகைக் காப்பாற்றுகிறான். மனித சமுதாய வாழ்வில் தீமைகள் வலுவானவை. அத்தீமைகளை வெல்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையல்ல, அதற்குத் தெய்வத் துணையும் கடுமையான மனித முயற்சியும் துணையும் தேவைப்படுகிறது. தீமையின் வடிவமான இராவணனும் சக்தி மிக்கவன். யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவன். தன்னேரில்லாத மாவீரன். அவன் சிறந்த வீரன் மட்டுமல்ல. சிறப்பான பல ஆற்றல்களையும் கொண்டவன். நான் மறைகளை நன்கு கற்று அறிந்தவன். இசை மேதை. வீணையில் வல்லவன். சிவபக்தன். தேவர்களையும் வென்றவன். கம்பீரமாக ஆட்சியை நடத்தி வந்தவன். அனைவரும் அவனுக்கு மரியாதை செலுத்தினர். அவனைக் கண்டு பயந்தனர். கும்பகருணனும் கூட தன் அண்ணனுடைய தவறுகளையும் குறைகளையும் எடுத்துக் கூறினாலும் கடைசியில் அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு கடும் போர் செய்து இராமன் கணையால் ΙΠΠΓΕΙΠΠΤΙ ΠΤΕΤΙΤ. இப்போது மாவீரன் மேகநாதன் அனுபவத்தில் உண்மையை உணர்ந்து சீதையை விட்டு விடும்படி கூறுகிறான். அப்போது இராவணன் எனக்கு யார் துணையும் தேவையில்லை. என்னை நோக்கியே நான் இந்நெடும் பகை தேடிக் கெண்டேன். என் உயிரை யேனும் விடுவேனேயல்லாமல் சீதையை விட மாட்டேன். நான் எனது முயற்சியில் வெற்றி கொள்ளாவிட்டாலும் இராமன் பேர் இருக்கும் வரையிலும் என் பெயரும் நிலைத்து நிற்கும். இன்றுளார் நாளை மாள்வார், புகழுக்கோர் இறுதியில்லை. நீ கவசங்களைக் கழற்றி வைத்து விட்டு, ஆயுதங்களை வைத்து விட்டுப் போர்த் தொழில் சிரமம் போக்கச் செல்வாய். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தனது தலை மகனிடம் கூறுகிறான். கவிச்சக்கரவர்த்தி இக்காட்சியை மிக அருமையாக எடுத் கூறுகிறார்.