பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் X] Yና சேது அணையைக் கட்டி முடித்ததும் இலங்கை மீது படையெடுத்ததும், இலங்கையில் இராவணன் தலைமையிலான அரக்கர் படையை வென்றதும் வானரப் படையின் வானரத் தலைமையின் உதவியைக் கொண்டு இராமன் அதைச் சாதித்து முடித்ததும், அது மானுடத்தின் மகத்தான வெற்றியாகக் கம்பன் நெடிது நோக்குடன் எடுத்துக் கூறுகிறார். திருமாலே மானிடப் பிறப்பெடுத்து மானுட வடிவில் வந்து செய்து முடித்த சாதனையாக இங்கு மானுடத்தின் வெற்றி உச்சம் பெறுகிறது. சுக்கிரீவன் அந்த மானிட சக்தியை அறிந்து இராமனுடன் சேர்ந்து அந்த இராமனுக்கு அவனுடைய மகத்தான அவதாரக் கடமையை நிறைவேற்றத் துணை நிற்கிறான். வாலி தான் உயிர்போகும் தருவாயில், 'தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும், தகவும், சால்பும், நீயென நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாயென நின்ற எம்மால் நவை அற உணராமே! தீயன பொருத்தி!' என்றான்; சிறியன சிந்தியாதான்” 'ஏவுகூர் வாளியால் எய்து, நாயடியனேன் ஆவிபோகும் வேலை வாய் அறிவு தந்து அருளினாய்! மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!' என்று கூறினான். அச்சிறியனசிந்தியாதான் என்று கவிப் பேரரசர் கம்ப நாடர் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். வானரப்படை திரண்டது. வல்லமை மிக்க அப்படையின் பெருக்கத்தையும் ஆற்றலையும் கம்பர் மிக அற்புதமாக விவரித்துக் கூறுகிறார். அவ்வானரப்படை, 'ஒடிக்குமேல், வட மேறுவை வோராடும் ஒடிக்கும்; இடிக்குமேல், நெடுவானக முகட்டையும் இடிக்கும்; பிடிக்கு மேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்; குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையால் குடிக்கும்.” இச் சேனையின் முடிவைக் காண முடியவில்லை என்றும் கணக்கிடத் தொடங்கினால் கடலினும் பெரியதாகக் காணப்படுகிறது என்றும்