பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 200 <E< =تحچّ காதலும் பெருங்காதலும் 'மங்கையைக், குலத்து உளாளைத் தவத்தியை முனிந்த வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், குலத்துக்கே தக்கான்' என்று கங்கை அம் சென்னியானும் கண்ணனும், கமலத் தோனும் செங்கையும் கொட்டி உன்னைச் சிரிப்பரான், சிறியன் என்னா !” அனைவரும் அற்பம் என்று கூறிச் சிரிப்பார்கள் எனவே அச்செய்கை 'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறியன்று, நீதி அன்று; தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல் அதுவும் அன்று; புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய், வலத்தியல்பு அன்பு, மாயாப் பழி கொடு மறுகு வாயோ?” என்று எடுத்துக் கூறி, 'இன்று நீ இவளை வாளால் எறிந்து போய், இராமன் தன்னை வென்று மீண்டும் இலங்கை மூதுர் எய்தினை வெதும்புவாயோ? பொன்றினள் சீதை, என்றே போவார்கள் அவர் தாம்; அல்லால் வென்றிட முடியாது என்னும் வீரமோ விளம்பல்! என்றான்' என்று கூறி இராவணனைத் தடுத்தான். இராவணனும் நிதானம் அடைந்து கூர்வாளைக் கீழே போட்டு நாளை போர்க்களம் சென்று அவர்களைக் கொல்லாது மீளேன் என்று சூளுரைத் தான் என்பதைக் கம்பன் குறிப்படுகிறார். போரில் மாண்ட இந்திரசித்தனுடைய உடலை போர்க்களத்திற்குச் சென்று இராவணன் துக்கிக் கொண்டு நகருக்குள் வந்தான். மகனுடைய உடல் மீது விழுந்து மண்டோதரி அழுது புரண்டாள். மகன் மாண்டு போன செய்தி இராவணனை உலுக்கி விட்டது. சினம் தலைக்கேரி கோப வேகத்தில் சீதையைக் கொல்வேன் என்று கூறி கூர்வாள் எடுத்துக் கொண்டு ஓடினான். முதலமைச்சன் மகோதன் அவனைத் தடுத்து அவனுடைய வீரம், வானளாவிய புகழ், நெறிமுறை, நீதி, குலத்திய மரபு முதலியவைகளையெல்லாம் எடுத்துக் காட்டிக் கடைசியில் சீதை