பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 2O1 மீது அவனுக்குள்ள ஆசையையும் எடுத்துக் கூறி அவனுடைய சினத்தைத் தடுத்து நிதானப்படுத்தினான். 32. மூலபலம் இராவணன் உலகம் முழுவதிலும் உள்ள அரக்கர் படைத் தலைவர்கள் அனைவரையும் அழைத்தான். அவர்கள் எல்லோரும் திரண்டு இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் இராவணனிடம் உன் வருத்தத்திற்கு ஏது காரணம் எனறு கேட்க, சீதை மீதான காதலினால் தோன்றிய நிலைமை முழுவதையும் விவரித்துக் கூறினான். “மாதரார்களும், மைந்தரும், நின் மருங்கு இருந்தார் பேது ராதவர் இல்லை, நீ வருந்தினை பெரிதும்; யாது காரணம் அருள்” என அனையவர் இசைத்தார்; சீதை காதலின் பிறந்துள பரிசு எலாம் தெரித்தார்” என்பதைக் கம்பன் குறிப்பிடுகிறார். அவர்கள் யார் என்று வன்னி என்பவன் கேட்ட போது மாலியவான், குரங்கு வந்ததும் இலங்கைக்கு எரியூட்டியதும் அக்கனைக் கொன்றதும், தூதுரைத்ததும் கடலில் அணை கட்டி வாணர சேனை படையெடுத்து வந்ததும் போர் நடத்தியதும் மீண்டதும் கும்பகர்ணனும் மற்ற மக்களும் இந்திரசித்தனும் மாண்டதும் பற்றிய விவரங்களை யெல்லாம் கூறி இவையெல்லாம் நடக்கக் காரணம். “இது இயற்கை; ஒர் சீதை என்ற இருந்தவத்து இயைந்தாள் பொது இயற்கைதிர் கற்புடைப் பத்தினி பொருட்டால் விதிவிளைத்தது; அவ்வில்லியர் வெல்க; நீர் வெல்க; முது மொழிப்பதம் சொல்லினேன்! என்றுரை முடித்தான்” இவர்களையெல்லாம் மடிய விட்ட காரணம் என்ன? என்று வன்னி என்னும் ஒரு படைத் தலைவன் (அவன் புஷ்கரத் தீவுக்கு அரசன்) கேட்டான். அதற்கு இராவணன் எதிரிகளை யெல்லாம் அற்பமானவர்கள் வெறும் மனிதரும் குரங்குகளும் என்று நினைத்தேன், என்று கூறினான்.