பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 205 'முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி' என்றும் 'வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க, வினையம் வியத் தெம்மடங்கப் பொரு தடக்கைச் செயல் அடங்க மயல் அடங்க, ஆற்றல் தேயத் தம் மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலை அடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா’’ என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர் தனது சிறப்பு மிக்க உலகப் புகழ் மிக்க தமிழ்க் கவிதைகளில் இராவணனுடைய வீழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத்தில் ஈடு இணையற்ற பாடல்களாகும். இவ்வாறு அம்முறை துறந்த இராவணனுடைய சினமும், மனமும் அடங்கியது, சொல்லும் மயலும் அடங்கியது. சீதை மேல் வைத்த அவனுடைய பெருங்காதல் அடங்கியது. இராமன் கணையால் அடிபட்டு இராவணன் வீழ்ந்தான். ‘'தேரினை நீ கொடு விசும்பல் செல்கென்ன மாதலியைச் செலுத்திப் பின்னர்ப் பாரிடை மீதினின் அணுகித் தம்பியொடும் படைத்தலைவர் எவரும் சுற்றப் போரிடை மீண்டு ஒருவருக்கும் புறம் கொடாப் போர் வீரன், பொருது வீழ்ந்த சீரினையே மனம் உவப்ப உருமுற்றம் திருவாளன் தெரியக் கண்டான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார்.