பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 2O6 >>==== காதலும் பெருங்காதலும் இவ்வாறு போர்க்களத்தில் கிடந்த மாவீரனின் முதுகில் ஒரு தழும்பு இருந்ததைக் கண்டு இராமன் திடுக்கிட்டான். இவனைக் கொன்றதில் எனக்குப் பெருமையில்லை எனக் கூறினான். அப்போது அதை மறுத்து வீடணன் மனம் வெதும்பி ‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ’ என்ற குறிப்பிட்டு, "ஆயிரம் தோளினானும், வாலியும் அரிதின் ஐய, மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை, தாயினும் தொழத் தக்கான் மேல் தாங்கிய காதல் தன்மை நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்?' என்று வீடணன் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இராவணன் மாவீரன், சுத்தவீரன், அவன் தாயினும் தொழத் தக்கவன். அவனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் கார்த்த வீரியார்ச்சுனன் மற்றும் வாலியால் ஏற்பட்ட காயத் தழும்புகளின் அடையாளமே தவிர அவை வேறில்லை. அவனுடைய குறையெல்லாம் அவனிடம் நிலவிய பெருங்காதல் நோயும் உனது முனிவும் தவிர வேறு இல்லை’ என்று இராவணனுடைய பெருமைகளைப் பற்றியும் ஏற்பட்ட குறையைப் பற்றியும் வீடணன் கூறுகிறான். அப்படியானால் இறந்தவன் மீது வைராக்கியம் காட்ட வேண்டிய தில்லை, நடக்க வேண்டிய கடன்களைச் செய்யுங்கள் என்று இராமன் கூறினான். வீடணன் தனது அண்ணன் இராவணன் உடல் மீது விழுந்து புலம்புகிறான். வீடணனுக்கு இராவணன் மீது அளவு கடந்த அன்பும், மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதனால் தான் தாயினும் தொழத்தக்கான் என்று குறிப்பிடுகிறான். வீடணனுக்குத் தன் அண்ணன் மீதுள்ள குறையெல்லாம் அவனுடைய பெருங்காதல் நோயும் தர்மத்தை மீறிய அவனுடைய செயல்களும் தான். “உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு, சானகி என்னும் பெரும் நஞ்சு, உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர், நீயும் களப்பட்டாயே! எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ? எண்ணி ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள் தம் பிரளயமே! அமரர் கூற்றே!”