பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 209 ஆகாச் சுந்தரன் நான்முகன் மரபில் தேன்றியவன், சிறந்த வேதங்களை அறிந்தவன். ஈசன் இருக்கும் கயிலை மலையையும் வேரோடு பறிக்கும் வல்லமை படைத்தவன், திசையானைகளை எதிர்த்துப் போரிட்டுப் பொடியாக்கும் தொள்வலி படைத்தவன். நான் முகன் அருளால் முடிவில்லாத ஆண்டுகளை ஆயுளாகக் கொண்டவன். சிவபெருமான் கொடுத்தவாளை ஆயுதமாகக் கொண்டவன், கோள்களை யெல்லாம் சிறைவைக்கும் ஆற்றல் மிக்கவன், விரிந்த கேள்வி ஞானங்கள் நிறைந்தவன், அழகு மிக்கவன் பெருமை மிக்கவன், இன்னும் எத்தனை பெருமைகள் இருந்தாலும் பெண்ணாசை பெண்ணாடல் பெருங்காதல் கடைசியில் அவனை வீழ்த்தி விட்டது. அரசியல் என்பது பொது வாழ்க்கை மக்கள் சேவை, நாட்டுப்பற்று ஆகியவற்றில் அர்ப்பணித்தல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுதல் அதில் பெருங்காதலும் பெண்ணாடலும் புகுமானால் அரசியல் தலைமையின் பெருமைகளைக் குலைத்துவிடும். அயோத்தி செல்லுதல் வீடணனுக்கு முடிசூட்டப் படுகிறது. மாருதி சீதையிடம் சென்று வெற்றியைப் பற்றிக் கூறுகிறாள். சீதை பெரு மகிழ்ச்சியடைகிறாள். சீதையைச் சீரோடு அழைத்து வருபடி இராமன் வீடணனிடம் கூறினான்.