பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 21 O >}=== காதலும் பெருங்காதலும் காணியைப் பெண்மைக் கெல்லாம்; கற்பினும் அணியைப் பொற்பின் ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயைச் சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள்’’ என்று கம்பர் குறிப்பிடுகிறர். சீதை சீரோடும் சிறப்போடும் அழைத்து வரப்பட்டாள். அவள் இராமனை நோக்கினாள். “அருந்ததி அனைய நங்கை, அமர்க்களம் அணுகி, ஆடல் பருந் தொடு, கழுகும் பேயும் பசிப்பிணி தீருமாறு விருந்திரு வில்லின் செல்வன், விழா அணி விரும்பி நோக்கிக் கருந்தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள்” “சீலமும் காட்டி, என் கணவன் சேவகக் கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ் ஞாலமும் காட்டிய கவிக்கு, நாள் அறாக் காலமும் காட்டும் கொல் என்தன் கற்பு என்றாள்” சீதை இராமன் முன்பு சென்று நேரில் அவளைக் கண்டாள், அவனும் அவளைக் கண்டான். அதை, 'கற்பினுக்கு அரசினைப் பெண்மைக் காப்பினைப் பொற்பினுக்கு அழகினைப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்’ என்று கம்பர் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இராமன் சீதையைப் பார்த்து 'உன்னை மீட்பன் பொருட்டு உவரி துர்த்து ஒளிர், மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அறப் பின்னை மீட்டுறு பகை கடந்திலேன்; பிழை என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன்’’ என்றும்,