பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 217 இக் கொடியாளையும் மாதென்று எண்ணுதியோ மணிப்பூணினாய்’ என்றும் பின்னும் தாழ் குழல் பேதமைப் பெண் இவள் என்னும் தன்மை எளிமையின் பால தே’ என்றும் விசுவாமித்திரன் கூறுவதையும் கம்பன் குறிப்பிடுகிறார். விசுவாமித்திரன் இராம இலக்குவர்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது மாமுனிவன் வேள்வி நடத்தவிருக்கும் இடத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, தங்கள் நாயகரின் தெய்வம் தான் பிறிது இலை என்றெண்ணும் மங்கைமார் சிந்தை போல தூயது” என்றும் எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால் இருந்து மேல் நாள் செய்த தவம் செய்தது' என்றும் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்த முனிவர் மாபலியின் வரலாற்றைப் பற்றிக் கூறுகிறார். “இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சிசூழ் மிதிலை புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்துவந்து இறுத்தார் மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்” மனையின் மாட்சியை அழித்து (இல்லறத்திற்குரிய சிறந்த கற்பை அழித்த) இழி (இழிவடைந்த) மாதவன் பன்னி கெளதம முனிவனுடைய மனைவியாகிய (அகலிகை) கனையும் (நெருங்கியிருக்கின்ற) மேட்டு உயர் கருங்கல் ஒர் வெள்ளிடைக் கண்டார்’ என்று அகலிகையைப் பற்றியும் கம்பன் பேசுகிறார். மிதிலைக் காட்சியில் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்’ என்றும் 'மருங்கிலா நங்கையும், வசை இல் ஐயனும் ஒருங்கிய இரண்டும் உடற்கு உயிர் ஒன்று ஆயினார், கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’’ என்றும் “பெண் வழி நலனொடும் பிறந்த நா னொாடும் எண் வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன்' என்றும், சீதைக்கு ஏற்பட்ட காதல் நோயைப் பற்றிக் குறிப்பிட்ட போது