பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 218 حجدلإج - காதலும் பெருங்காதலும் 'வாசமென் கலவைக் களி, வாரிமேல் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள் விசவீச வெதும்பினள் மென்முலை; ஆசை நோய்க்கும் மருந்தும் உண்டாம் கொலோ?” என்றும் கவிச் சக்கரவர்த்தி குறிப்பிடுகிறார். பூக்கொய் படலத்தில் “ஊறு இல் ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் வீறு சேர்முலை மாதரை வெல்வரோ? எனவும் உலாவியல் படலத்தில் கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம். இப்பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும்’ என்றும், இன்னும் 'பெருத்த காதலின் பேதுறு மாதரின் ஒருத்தி, மற்றங்கு ஒருத்தியை நோக்கி, என் கருத்தும் இவ்வழி கண்டதுண்டோ என்றாள் அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ! என்றும் கவி குறிப்பிடுகிறார். வசிட்டன் கூறும் அரசியல் அறிவுரைகளின் பகுதியாக 'துமகேது புவிக் கெனத் தோன்றிய வாம மேகலை மங்கையரால் வரும் காமம் இல்லை எனில், கடும் கேடு எனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே’ என்று குறிப்பிடுகிறார். கைகேயி மேகலை சிந்தி, வளை துறந்து, தனது திலகத்தையும் அழித்துக் கொண்டு தலைவிரி கோலமாகப் படுத்துக் கிடந்தவளைத் தசரதன் மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல தடம் கைகள் கொண்டு தழி இ எடுக்கல் உற்றான்' என்றும் அக்கைகேயியைப் பற்றி மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள்’ என்றும் “தீயவை யா வையினும் சிறந்த தீயாள்' என்றும், நாகம் என்னும் கொடியாள்” என்றும் “பெண் என உட்கும் பெரும் பழிக்கு நானும்’ என்றும் ‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றும் 'பெண்ணே, வண்மைக்கேகையன் மானே, பெறுவாயேல் மண்ணே கொள் நீ, மற்றயது ஒன்று மற” என்றும் “தன்னேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்' என்றும் 'நச்சுத்