பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 219 தீயே பெண் உரு அன்றோ?' என்றும் உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர்' என்றும் “என் மனைவாழும் பெண்ணால் வந்தது அந்தரம்” என்றும் பெண்டிரின் கூற்றம் அன்னாள், பிள்ளையைக் கொணர்க என்றாள்' என்றெல்லாம் கையேயியின் நிலை பற்றிக் கம்பர் குறிப்பிடுகிறார். இராமனுக்கு நாடில்லை காட்டிற்குச் செல்கிறான், என்னும் செய்தியைக் கேட்ட போது அயோத்தி மக்கள் அழுது புலம்பினர் 'பெண் செய்த பாவம் பெரிதென்பார் என்றும் 'ஆதி அரசன் (தரசதன்) அரும் கே.கையன் மகள் மேல் காதல் முதிரக் கருத்தழிந்தானாம் என்றும் மக்கள் கூறியதை கவிப் பேரரசர் குறிப்பிடுகிறார். இது சாதாரண மக்களுடைய வாக்கு. பொது அறிவு மிக்க பொது மக்களின் வார்த்தைகளில் உண்மைநிலை பளிச்சிடும். இராமனுக்குப் பட்டம் இல்லை என்பதைக் கேள்விப்பட்டவுடனே இலக்குவன் சீற்றம் கொண்டான், நங்கைக்கு (கைகேயியின்) அறிவின் திறம் நன்றிது’ என்றும் “பெண்ணாட்டம் ஒட்டேன் (பெண்களின் கருத்துக்கு இடம் கொடுக்க மாட்டேன்) இப்பேர் உலகத்துள்’ என்றும் விரை செறி குழலி மாட்டு அளித்த மெய்யனை” என்று கோபாவேசத்துடன் பேசினான். வனவாசத்தின் தொடக்கத்தில் வனத்தின் இயற்கைக் காட்சிகளை இராமன் சீதைக்குக் காட்டிக் கொண்டு அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! ஒருவில் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! மடந்தை மார்க்கு ஒரு திலதமே குழுவு நுண் துளைவேயினம் குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே” என்றெல்லாம் அச் சீதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். காட்டில் நடந்து செல்லும் போது சீதைக்கு ஏற்பட்ட கஷ்டங்களை மறக்க அவளுக்கு ஆறுதல் கூறுவதாகவும் அவள் மீது இராமனுக்குள்ள மிகுதியான அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவதாகவும் இந்த அருமையான சொற்கள் அமைந்துள்ளன. பரதன் காட்சி பரதன் அயோத்திக்கு வந்து அங்கிருந்த நிலையைக் கண்டு வருந்தித் தனது தந்தையைப் பற்றி