பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 220 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் “சினக்குறும்பு எறிந்து, எழுகாமத்தி அவித்து, இனக்குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும் மனக்குறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து உனக்குறு நெறி செலல் ஒழுக்கின் பாலதோ?” என்று எண்ணித் தவிர்க்கிறான். பரதன், அன்னை கோசலையைக் காணச் சென்ற போது அக்கோசலையைப் பற்றி ‘குலம் பொறை, கற்பு இவை சுமந்த கோசலை” என்று கம்பர் குறிப்பிடுகிறார். இராமன் காடு சென்ற செய்தியைக் கேட்டு அதற்குக் காரணமாகத் தனது தாய் இருந்ததைக் கேட்டு மனம் நொந்துத் தன்னையே சபித்துக் கொள்கிறான். 'அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன், பொய்க்கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன், வழக்கில் பொய்த்துளோன், நன்றி மறந்தவன்” என்றெல்லாம் பல பாவச் செயல்களைக் குறிப்பிட்டு அவகைளின் பகுதியாக ஆறு தன் உடன் வரும் அஞ் சொல் மாதரை ஊறு கொண்டு அலைக்கத் தன் உயிர் கொண்டு ஏகினோன்’ என்றும் கன்னியை அழிசெயக் கருதினோன், குருபன்னியை நோக்கினோன், நறை பருகினோன்’ என்றும் காமவெறி பாதகச் செயல்களையும் குற்றப் பிரிவுகளாகக் கூறுகிறான். மனம் பதறுகிறான். இராமன் இருக்கும் இடத்தை நோக்கி பரதன் தன் படை பரிவாரங்களுடன் செல்கிறான். அவன் தூரத்தில் வருவதைக் கண்டு தங்கள் மீது பரதன் படையெடுத்து வருவதாகச் சந்தேகப்பட்டு இலக்குவன் சீறி எழுந்து சினங் கொண்டு பேசினான். “ஒரு மகள் காதலின் (ஒரு பெண் மேல் வைத்த ஆசையால்) உலக நோய் செய்த பெருமகன் (உலகைத் துன்புறுத்திய தசரதன்) ஏவலின் பரதன் வருகிறான்” என்று கூறுகிறான். “சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ!' என்று இராமன் இலக்குவனிடம் கூறி அவனை அமைதிப்படுதினான். ‘'நீ ஏன் மகுடம் தாங்கிக் கொள்ள வில்லை’ என்று கேட்கப்பட்ட இராமனுடைய கேள்விக்கு பரதன், 'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்