பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 223 இராமனைக் கண்ட போது சூர்ப்பனகையின் கற்பு தேய்ந்தது என்று இங்கு கம்பன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இன்னும் 'வான் தனில் வரைந்ததோர் மாதர் ஒவியம் போன்றனள், புலர்ந்தனள், புழுங்கும் நெஞ்சினள், தோன்றல் தன் சுமர் மணித் தோளில் நாட்டங்கள்; ஊன்றினள், பறிக்க ஓர் ஒற்றம் பெற்றனள்.” “நின்றனள், இருந்தவன் நெடிய மார்பகம் ஒன்று வேன், அவன்றெனின் அமுதம் உண்ணினும் பொன்றுவென்; போக்கினி அரிது போம் எனாச் சென்றெதிர் நிற்பதோர் செய்கை தேடுவாள்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு பெருங்காதல் உணர்வு பெற்ற ஒருத்தியின் மனோ நிலையைக் கம்ப நாடர் வடித்துக் காட்டுவதைக் காண்கிறோம். அவள் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு இராமன் முன் வந்ததைப் பற்றி "பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி; அம்சொல் இள மஞ்ஞைஎன, அன்னம் என, மின்னும், வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்' என்றும் "கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி மேனி நனி பெற்ற விளைகாமம் நிறை வாசகத் தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனி பெற்று, ஒர் மானின் விழி பெற்று, மயில் வந்தது என வந்தாள்' என்றும் சூர்ப்பனகை காம உணர்வோடு எப்படி வந்தாள் என்பதைக் கம்ப நாடர் மிக அருமையாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். தன் எதிரில் வந்து நின்ற சூர்ப்பனகையை இராமன் நீ யார் என்றும் உன் பெயரென்ன வென்றும் கேட்ட போதும் அவள் “காம வல்லியாம் கன்னி' எனத் தன் பெயரைக் குறிப்பிடுகிறாள். அவள் வந்த காரியம் என்ன வென்ற கேட்ட போது