பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 228 அயில் உடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் உருகிற்று அன்றோ!' என்றும், “விதியது வலியினாலும், மேல் உளவிளை வினாலும் பதியுறு கேடுவந்து குறுகிய பயத்தினாலும் கதிஉறு பொறியின் வெய்ய காம நோய் கல்விநோக்கா மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்த தன்றே' என்றும், “பொன் மயமான கங்கை மணம் புகப், புண்மை பூண்ட தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்ததோர் தன்மையாலோ! மன்மதன் வாளி தூவி நலிவதோர் வலத்தன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்த தன்றே” என்றும் 'வன்பனை மரமும் தீயும், மலைகளும் குளிர, வாழும் மென்பனி எரிந்த தென்றால் வேனிலை விளம்பலாயோ! அன்பெனும் விடம் உண்டாரை ஆற்றலாம் மருந்தும் உண்டோ! இன்பமும் துன்பம் தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றோ’’ என்றும் 'கூலத்தால் உலகமெல்லாம் குளிர்ப்போடு வெதுப்பு நீங்க நீலத்தார் அரக்கன் மேனி நெய்யின்றி எரிந்தது அன்றோ! காலத்தால் வருவது ஒன்றோ! காமத்தால் கனலும் வெந்திச் சீலத்தால் அவிவது அனறிச் செய்யத்தான் ஆவது உண்டோ?” என்றெல்லாம் காம நோயின் இயல்பு பற்றி;க் கம்பன் மிக நன்றாகக் குறிப்பிடுகிறார். இதில் சிறப்பான பல பொது ஒழுக்க நெறிக் கருத்துக்கள் இருப்பதையும் காண்கிறோம். மாரீசனிடம் இராவணன் சென்றான். தனது திட்டத்தைக் கூறினான்.