பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் تدخلإصلاح xxii போட்டு விட்டு மேலும் தெற்கு நோக்கிச் சென்று பொருனை நதியைக் கடந்து மகேந்திர மலைக்குச் செல்லுங்கள்’ என்று கூறுகிறார். சீதையைத் தேடிச் செல்லும் அனுமனைத் தனியாக அழைத்து இராமன் சீதையின் தோற்றத்தையும் அடையாளங்களையும் எடுத்துக் கூறுகிறான். 'குழல்படைத்து, யாழைச் செய்து, குயிலொடு கிளியும் கூட்டி, மழலையும், பிறவும் தந்து வடித்ததைம்மலரின் மேலான் இழைபொரும் இடையினாள்தன் இன்சொற்கள் இயையச் செய்தான் பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறுங்கொல் இன்னும்' என்றும், 'எந்நிறம் உரைக்கேன், மாவின் இளநிறம் முதிரும்; மற்றைப் பொன் நிறம் கருகும்; என்றால், மணிநிறம் உவமை போதா, மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின் தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! ' என்றும் மிகவும் நுட்பமாக சீதையின் பேர் அழகைக் குறிப்பிடுகிறார். அனுமன் அசோக வனத்தில் சீதா பிராட்டியைச் சந்தித்தான். கணையாழியைக் கொடுத்தான். அக்கணையாழியைக் கண்ட சீதா தேவியின் மனோ நிலையைப் பற்றிக் கம்பநாடர் மிக அற்புதமாக விவரித்துக் கூறுகிறார். "இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ? மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர் கொல் என்கோ? துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது கொல் என்கோ? திறம் தெரிவது என்னை கொல்இ நன்னுதவி செய்கை !' 'இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள், உழந்து விழிபெற்றது ஒர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்' “வாங்கினள்; மார்பிடை வைத்தனள், சிரத்தால் தாங்கினள்; மலர்க்கண்மிசை ஒத்தினள், தடந்தோள் வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்போடு ஏங்கினள், உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமோ?”