பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 230 >}==== காதலும் பெருங்காதலும் “தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை; எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?” என்றும் “சினையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அணையதன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சி, என்றான் மனு நீதியாள்' என்றும் அவனிடமிருந்த குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறான். இராம காவியத்தில் வாலிவதை ஒரு புதிராகக் கற்றறிவாளர்களால் விவாதிக்கப்படுகிறது. அப்படலத்தில் வாலிக்கும் இராமனுக்குமிடையில் நடைபெறும் உரையாடல் ஒரு அற்புதமான காட்சியாகும். வாலி தனது தவறுகளைத் தன் உயிர் போகும் தறுவாயில் உணர்ந்ததை “தீயன பொருத்தி என்றான் சிறியன சிந்தியா தான்” என்று கம்பன் குறிப்பிடுவது அருமையான பொருள் பொதிந்த குறிப்பாகும். ஆவி போம் வேலை வாய் அறிவு தந்து அருளினாய்’ என்பது வாலியின் வாக்காகும். கிட்கிந்தா காண்டத்தின் அரசியல் படலத்தில் இராமன் சுக்கிரீவனுக்குக் கூறிய அறிவுரைகளில் “மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்; என்றல் சங்கையின்றி உணர்தி1 வாலி செய்கையால் சாலும் இன்னும் அங்கவர் திறத்தினானே, i அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி அன்றே இதனின் வேறு உறுதி உண்டோ?” என்று மிக நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாக வேறு பல இடங்களிலும் எடுத்துக் காட்டப்படுகிறது. பகல் நீங்கி இருள் வருவதைப் பற்றிக் கூறும் போது சூரியன் மறைந்தான். நீல வானம் இருண்டது அதை