பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சீனிவாசன் м")і 231 'நஞ்சினில் நளிர் நெடும் கடலின், நங்கையர் அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின் வஞ்சனை அரக்கர்த்ம் வடிவின், செய்கையின் நெஞ்சினின் இருண்டது நீல வானமே” என்று கம்பர் குறிப்பிடுகிறார். நஞ்சு, கடல், நங்கையர் கண், அவர்களின் அவிழ்ந்த கூந்தல், அரக்கர்களின் வடிவம் அவர்களுடைய செயல், நெஞ்சம் ஆகியவைகளைப் போல நீல வானம் இருண்டது என்பது அதன் பொருளாகும். சுந்தர காண்டத்தில் அனுமன் இலங்கையை அடைந்தான் இருள் பரவிற்று 'ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்; ஆய்வினை மனத்தினான்; அறிஞர் சொல் கேளான் விவினை நினைக்கிலான், ஒருவன் மெய்இலான் தீவினை என இருள் செறிந்தது எங்குமே” என்றும் இராவணனுடைய செய்கையைப் பற்றி 'வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவள் பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் திண்மை நீங்காதவன் சிறைவைத்தன் எனும் வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே' என்றும் அனுமன் சிந்தனை செய்து கொண்டு இலங்கையைக் கண்டதாகக் கம்பன் குறிப்பிடுகிறார். அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையிடம் வந்த இராவணன் இனிமையாகப் பேசினான். சீதை சீறினாள். பின்னர் இராவணன் கடுங்கோபம் கொண்டான். அவனுடைய காமத்தையும் மிஞ்சியது அவனுடைய சீற்றம். அதை “குறிப்பது என் காமத்தின் திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை” என்றும் “கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடப்ப' என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். இலங்கை நகருக்குள் அனுமன் அட்டகாசம் செய்த பொழுது அவனை எதிர்த்த அரக்கர்கள் அனைவரும் அடிபட்டு மாண்ட