பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 233 'திறம் திறம்பிய காமச் செருக்கினால் மறந்து தத்தம் மதியின் மயங்கினார்’ என்றும் பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு இருள் உண்டாம் என எண்ணலர்’ என்றும் இச்சைத் நன்மையினில் பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற நாண் இலன்' என்றும் மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினில்’ என்றும் அரும் பெறல் செல்வமும், ஒது பல்கிளையும் உயிரும் பெறச் சீதையைத் தருக எனச் செப்பினான் சோதியான் மகன்’ என்றும் அனுமன் இராவணனுக்கு எடுத்துரைத்ததைக் கம்பன் மிக நட்பமாக எடுத்துக் கூறுகிறார். மந்திரப் படலத்தில் இராவணனுடைய மந்திராலோசனைச் சபையில் இலங்கை எரியுண்டது பற்றியும்.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மந்திரலோசனை நடைபெறுகிறது. அப்போது கும்பகருணன் 'வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?' என்றும், “உன்னுயிர் அனைத்தகைய தேவியர்கள் உன்மேல் ஒள் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றான் பொன் அடி தொழத் தொழ மறுத்தல் புகழ் போலாம்’ என்றும் என்று ஒருவன் இல் உறை தவத்தியை அறம் துறந்து சிறை வைத்தாயோ அன்று அறம் ஒழிவது ஆயின அரக்கர் புகழ்' என்றும் ஆசில் பர தாரம் அவை அம் சிறையடைப்போம்” என்று நாசில் புகழ் காதல் உறு வெம்’ என்றும் பேணுவது காமம்’ சிட்டர் செயல் செய்திலை’ என்றெல்லாம் சபையில் கூறி இராவணனை முதலில் திருத்தப் பார்த்தான். வீடணன் எழுந்து கோநகர் முழுவதும், நினது கொற்றமும் சானகி எனும் பெயர் உலகின் தம் மனை ஆனவள் கற்பினாள் வெந்தது' என்றும் உயர்வும் மீட்சியும் பெண் பொருட்டு’ என்றும் தளர்ந்து சாய்வது ஒரு மானுட மடந்தையால்’’ என்றும் தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள், நோய் உனக்கு நான்’ என நுவன்றுளாள் அவள் ஆயவள் சீதை' என்றும் அசைவில் கற்பின் அவ்வனங்கை விட்டருளுதி” என்றும் பேசுகிறான். முதல் நாள் போர் வானரப் படைக் கடலில் அணை கட்டிக் கடலைக் கடந்து வந்து இலங்கைக் கோட்டையை முற்றுகையிட்டு நிற்கிறது. அப்போது மாலியவான் இராவணனிடத்தில் சென்று சீதையை விடுதியாயின்