பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 234 == ->==== காதலும் பெருங்காதலும் தீரும் இத்தீமை’ என்று கூறுகிறான். மேலும் வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது” என்றும் கூறினான். முதல் நாள் போரில் தோல்வியடைந்து இராவணன் வாரணம் பொருத மார்பும் மற்றவையும் வீரமும் களத்தே போட்டு வெருங்கையோடு இலங்கை புகுந்தான். தன் மாளிகைக்குள் புகுந்து ஒரு படுக்கையில் படுத்தான். அவன் தனது உள்ளத்தில் நாணம் கொண்டிருந்த போதிலும் அதில் சீதையே நிறைந்திருந்தாள் “பண் நிறைப் பவளச் செவ்வாய்ப் பைந்தொடிச் சீதை என்னும் பெண் இறை கொண்ட நெஞ்சில், நாண் நிறை கொண்ட பின்னர் கண் இறை கோடல் செய்யான்; கையறு கவலை அற்ற உள்நிறை மானந்தன்னை, உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான்' என்றும் 'வான் நகும், மண்ணும் எல்லாம் நகும், மணி வயிரத் தோளான் நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நானான்; வேல் நகு நெடுங்கண், செவ்வாய், மெல் இயல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே மானத்தால் சாம்புகின்றான்” என்று கம்பநாடர் மிக அற்புதமாகத் தனதுக் கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார். கும்பகருணன் போர்க் கோலத்தில் கும்பகருணனை எழுப்பி அவனுக்குப் போர்க் கோலம் புனைந்தனர். தன்னை அலங்கரிப்பது ஏன் என்று அவன் தனது தூக்கக் கலக்கத்தில் கேட்டான். மானுடரும் வானரரும் கோ நகரைச் சுற்றி வளைத்துள்ளனர் என்று கூற அவன் 'ஆனதோ வெம்சமம், அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?” என்றும் 'திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ?” என்றும் கூறுகிறான். கும்பகருணன் தனது அரைத் துக்கத்திலும் கூட இராவணனுடைய செயலை ஆட்சேபிக்கிறான். மறுத்துக் கூறுகிறான். சீதையை விட்டு விடும்படி சொல்கிறான். இன்னும் அச் சீதையை விட வில்லையா? எனக் கேட்கிறான். மாயா ஜனகப் படலத்தில் இராவணன் முதலில் சீதையிடம் சென்று அவளுடைய காதலுக்காகக் கெஞ்சுகிறான்