பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 'ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதியாகக் கூச மூன்றுஉலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக்கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்னா ஆண்மை தான் மாசுனாதோ? 235 என்றும் 'அந்தரம் உணரின், மேல்நாள் அகலிகை எண்பாள் காதல் இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ? மந்திரம் இல்லை, வேறோர் மருந்தில்லை மையல் நோக்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்; அழுதச் சொல்லீர்!” என்றும் பேசுகிறான். அதிகாயன் வீழ்ந்த செய்தி அதிகாயனும் அவனைச் சேர்ந்த வல்லமை மிக்க பல படை வீரர்களும் மாண்ட செய்தி கேட்டு இராவணன் மிக்க வருத்தம் கொண்டு பலவாறாக எண்ணினான். மண்ணினை எடுக்க எண்ணும், வானினை இடிக்க எண்ணும், எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து ஏற்ற எண்ணும், பெண் எனும் பெயரை எல்லாம் பிளப்பென்’ என்று எண்ணும்’ என்றும் இராவணன் பலவாறு எண்ணமிடுவதைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். அதிகாயனுடைய அன்னை தான மாலை தன் மகனுடைய மரணச் செய்தி கேட்டுப் பலவாறாகப் பேசிப் புலம்புகிறாள். மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன் தன் உந்து சிலைப் பகளிக்கு எண்ணக் கொடுத்தாயே’ என்றும் 'அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான், மிக்க திறத்தார் உள்ளார்கள் எல்லாம் வீடினார்’ என்றும் 'ஏதையோ சிந்தித்து இருக்கின்றாய்! எண் இறந்த கோதையர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ! பேதையாய்க் காமம் பிடிப்பாய்! பிழைப்பாயோ? சீதையால் இன்னும் வருவ சில வேயோ?” என்றெல்லாம் கூறிப் புலம்பியதைக் கம்பன் மிகுந்த கருத்துச் செரிவு மிகுந்த கவிதைகளில் குறிப்பிடுகிறார்.