பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 236 --> காதலும் பெருங்காதலும் இராமன் துயரம் இந்திரசித்தன் பிரம்மாஸ்திரத்தை ஏவி இலக்குவனையும் இதர பல வாணர வீரர்களையும் சாய்த்தான். இராமன் போர்க்களத்திற்கு வந்து பார்த்த போது அனைவரும் மாண்டு கிடப்பதைக் கண்டு கலங்கினான், புலம்பினான் அப்போது “மண்மேல் வைத்த காதலின், மாதர் முதலோர்க்கும், புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன், பெண்மேல் வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்; எண்மேல் வைத்த என்புகழ் நன்றால் எளியேனோ? ’’ என்று கூறி இராமன் புலம்பியதாகக் கம்பன் குறிப்பிடுகிறார். மேலும் இராமபிரான் 'சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை யாது என உணர்த்துகேன்! உலகொடு இவ்வுறாக் காதைவன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன்” எனவும் 'மாயையிம்மான் எனஎம்பி வாய்மையால் துயன உறுதிகள் சொன்ன சொற்கொளேன்! போயினென்; பெண் உரை மறாது போனதால் ஆயது இப்பழியுடை மரணம்; அன்பினிர்' எனவும் இன்னும் “தாதையை இழந்தபின், சடாயு இற்றபின் காதல் இன் துணைவரும் மடியக் காத்து உழல் கோது அறு தம்பியும் விளியக், கோள் இலன் சீதையை உகந்துளான் என்பர் சீரியோர்” என்றும் பலவாறாக வருந்தி இராமன் பேசியதைக் கம்பன் மிகுந்த அவலச் சுவையுடன் குறிப்பிடுகிறார். தனது அன்பு மிகுந்த மனைவி சீதையின் மீதுள்ள காதல் மிகுதியால் அவளுக்காகத் தனது தம்பியை யும் இதர நண்பர்களையும் பலி கொடுத்தான் என்று நல்லவர்கள் பலரும் பேசுவர் என்று இராமன் வருந்துகிறான் என்றும் கம்பன் இங்கு குறிப்பிடுவது மிகவும் நுட்பமான செய்தியாகும்.