பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 237 அனுமனுடைய ஆற்றலால் சஞ்சீவி மலையே கொண்டு வரப்பட்டு அதன் மருத்துவ இலைகளின் குணங்களால் மாண்டோர் எல்லோரும் உயிர் பெற்றெழுந்தனர். இந்த செய்தி இராவணன் சபைக்குச் செல்கிறது. மாலியவான் மீண்டும் இராவணனிடம் வந்து அவனுக்கு அறிவுரை கூறுகிறான். 'இன்னும் சானகியை மரபின் ஈந்து அவ்வறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐயா’’ என்று கூறினான் அதைக் கேட்டு இராவணன் 'கட்டுரை அதனைக் கேளா, கண்எரி கதுவ நோக்கிப் பட்டனர் அரக்கர் என்னில், படைக்கல் படைத்த எல்லாம், கெட்டன என்னும், வாழ்க்கை கெடாது; நல்கிளி அன்னாளை விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை விய?’’ என்று கூறிவிட்டான். நிகும்பலை யாகத்தின் போது நிகும்பலை யாகத்திற்குச் செல்வதற்கு மறுக் காட்டாக இந்திரசித்தன் மாயா சீதையைக் கொண்டு வந்து அதை வானரப் படையினர் முன்பாக வெட்டிக் கொன்றான். அதை நேரில் கண்ட அனுமன் அங்கமும் மனமும் கண்ணும் உயிரும் துடிக்க வருந்தி விரைவில் வந்து இராமனிடம் செய்தி கூற அவன் தீரும் இச் சீதையோடும் என்கில தன்று இத்தீமை’ என்றும் “தாதைக்கும் சடாயுவான தந்தைக்கும், தமியள் ஆய சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது ஒருவன் தீமை பேதைப் பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழையிலாத காதல் தம்பியர்க்கும், ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே?’’ என்றும் வருந்தியதைக் கம்பர் குறிப்பிடுகிறார். இந்திரசித்தன் நிகும்பலை யாகத்தைத் தொடங்கினான். இலக்குவனும் வீடணனும், அனுமனும் சென்று அவனுடைய யாகத்தைத் தடுத்தனர். வீடணன் தான் தனது தோல்விக்குக் காரணம் என்று கருதி இந்திரசித்தன் அவனை ஏசினான். அப்போது இருவருக்கும் ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்திரசித்தன்