பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 238 தன்னை இகழ்ச்சியாகப் பேசியதற்கு பதிலளித்து பேசியபோது வீடணன் 'அறம் துணையாவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் மறம் துணையாக மாயாப் பழியோடும் வாழ மாட்டேன்’ என்றும் வலியால் ஒன்றும் கொண்டிலேன்' என்றும் “பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்றாமோ?’ என்றும் “கற்பினில் சிறந்துளாளை நோவன செய்தல் தீது என்றும் உரைப்ப நுன் தாதை சீறிப் போ என உரைக்கப் போந்தேன்’ என்றும் கூறியதைக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். நிகும்பலை யாகத்தைச் செய்ய முடியாமல் இலக்குவனிடமும் வீடணனிடமும் அடிபட்டு ஓடி வந்து இந்திரசித்தன் தன் தந்தையிடம் வந்து “சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைத்தான், தாழ்விலாப் படைகள் மூன்று தொடுத்தேன், இளையவன் அதைத் தடுத்து விட்டான்' என்றும் ‘குலம் செய்த பாவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டாய்” என்றும் ஆசை தான் அச்சீதைபால் விடுவையாயின் அனையவர் அச் சீற்றம் தீர்வர், போதலும் புரிவர், செய்த தீமையும் பொறுப்பர், உன்மேல் காதலால் உரைத்தேன்’ என்று தனது சொந்த அனுபவத்தில் உண்மையை உணர்ந்து நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். இதைக் கேட்ட இராவணன் பெருநகை புரிந்துத் தன்மகனிடம் 'பிள்ளாய் நீ போர் செய்து களைப்படைந்து விட்டாய் நீ போய் ஒய்வு எடுத்துக்கொள் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம், “என்னையே நோக்கியான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன்’ என்று கூறி விட்டு நான் யாக்கையை விடுவது அல்லால் சீதையை விடுவ துண்டோ?’ என்றும் “வென்றிலேன் என்ற போதும், வேதம் உள்ளவும் யானும் நின்றுளேன் அன்றோ மற்ற இராமன் பேர் நிற்குமாயின்’ என்றும் கூறியதை இராமாயண மகா காவியத்தின் உச்சமாகக் கம்பன் மிக அருமையாக எடுத்துக் கூறுகிறார். இங்கு இராவணனுடைய இறுதி முடிவு தீர்மானமாக வெளிப்பட்டு விட்டது. இந்த வார்த்தைகளில் இராவணனுடைய பெருங்காதலும் கம்பீரமும் இணைந்துவிட்டன. இந்திரசித்தன் முடிவு இந்திரசித்தன் போரில் மாண்டான். இலக்குவனுடைய கணைகளால் அறுபட்ட அவனுயை தலையை அங்கதன் எடுத்துக் கொண்டு போய் இராமனுடைய காலடிகளில் வைத்தான்.