பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 239 இராவணன் போர்க்களத்தில் புகுந்துத் தலையில்லாத மகனுடைய உடம்பைத் தூக்கிக் கொண்டு இலங்கை நகருக்குள் வந்தான். தன் மகனுடைய உடல் மீது விழுந்து தாய் மண்டோதரி புலம்பி அழுதாள் "பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர் தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே, மீண்டதில்லை; அஞ்சினேன்! அஞ்சினேன் அச் சீதை என்று அமுதால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ?' என்று மண்டோதரி அழுது புலம்புகிறாள். இலங்கை வேந்தனுக்கும் நாளைக்கு இதே கதி தான் ஏற்படும் என்னும் முடிவுக்கும் மண்டோதரி வந்து விட்டாள் என்பதை இங்குக் கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இந்திரசித்தன் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த இராவணன் “சீதையைக் கொல்வேன்’ என்று தனது வாளை உருவிக் கொண்டு ஒடினான். மகோதரன் அவனைத் தடுத்து இச் செய்கையால் பேராப் பெரும் பழி வந்து சேரும்’ என்றும் “மங்கையைக் குலத்து உளாளைத் தவத்தியை முனிந்து வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால் குலத்துக் ேகதக்கான்” என்று கங்கை அம் சென்னியானும், கண்ணனும், கமலத்தோனும் செங்கையும் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறியன் என்னா?” என்றும் 'இன்று நீ இவளை வாளால் எறிந்து போய், இராமன் தன்னை வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ?