பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சீனி ..") G|ШПТЕF6UT 245 36. தொகுப்புரை - 2 கற்பு நெறி இராம காதையில் மிக முக்கியமாக எடுத்துக் காட்டப்படும் அறநெறிகள், ஒழுக்க நெறிகள் ஆகியவை இருபாலருக்கும் பொதுவாக வலியுறுத்தப்படுகிறது. இராமபிரானுடைய ஏக பத்தினி விரதமும், சீதா பிராட்டியின் கோதிலாக் கற்பு நெறியும் மிக உயர்ந்த நிலையில் முன் வைக்கப்படுகிறது. கம்ப நாடர் தனது மகா காவியத்தில் கற்பு நெறி பற்றிய சொற்றொடர்களை மிக விரிவாகப் பல இடங்களிலும் கையாண்டுள்ளார். கம்பனுடைய இராம காவியம் ஒரு தெய்வீகக் காவியம் என்னும் முறையிலும் அதன் தெய்வீகப் பாத்திரங்களின் சிறப்புகளிலும் இலக்கியப் பாத்திரங்களின் சிறப்புகளிலும் இலக்கியச் சிறப்புகளிலும் கற்பு நிலையின் மேன்மைகளை அதன் தெய்வீகத் தன்மையிலும் இலக்கியத் தன்மையிலும் காண்பது மிகவும் அவசியமாகும். உலகில் உள்ள அத்தனை பொருள்களையும் உலகம் அனைத்தையும் ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலுமான கடமைகளைத் தங்களுடைய நீங்காத தொடர்ச்சியான விளையாட்டுகளாக நடத்திக் கொண்டிருக்கும் முழு முதல் தலைவன் அப்பொருள்களின் செயல் பாடுகளை நெறிப்படுத்தவும் செய்கிறான். இயற்கை சக்திகளின் செயல்பாடுகளை முழு முதற் தலைவன் நெறிப்படுத்துகிறான். இதில் அறிவு சார்ந்த மனித முயற்சிகளும் துணையாக நிற்க வேண்டும். இயற்கையைப் போலவே மனித வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும். அதன் பகுதி கற்பு நெறியுமாகும். மனிதனுடைய குண இயல்புகளை சாத்வீகம், ராஜசம், தாமசம் என்னும் மூன்று பிரிவுகளாக வகுத்துக் கூறியுள்ளார்கள் நமது முன்னோர்கள். அதுவே நமது நாட்டின் தத்துவ ஞான சிந்தனையின் அறிவு இயல் தத்துவத்தின் தொடக்கமாகும். இந்த முக்குணங்களும் இயற்கைச் சூழல்களின் செல்வாக்கிற்கு உட்பட்டுச் செயல்படுகின்றன. அவைகளை முறைப்படுத்திச் செல்வது நமது கடமையும் முயற்சியுமாகிறது. வெள்ளம், பறவை, விலங்கு, வேசையர் உள்ளம் ஆகியவை பொதுவாக ஒரு நிலையில் நிற்காது ஒரு வழியில் ஓடாது.