பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 246 حجدلإح- காதலும் பெருங்காதலும் இவைகளையும் கூட தனது நல்லாட்சியினால் நெறிப்படுத்தி ஒரு வழியில் ஓடவைத்தது தசரதனுடைய ஆட்சி என்பதைக் கம்பன் மிகவும் சிறப்பாகத் தனது காவியத்தில் குறிப்பிடுவதைக் காண்கிறோம். மனிதர்களின் ஒழுக்க நெறிகளை மட்டுமல்லாமல் இயற்கை சக்திகள் பறவைகள் விலங்குகள் மற்றும் எய்தின் எய்தியதாக உணர்வு செல்லும் வழியில் போன போக்கில் செல்லும் மக்களையும் நெறிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் கம்ப காவியம் வலியுறுத்துகிறது. இதையே தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னுதலின் அவசியத்தை இராமபிரான் வாலிக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. கம்பனுடைய காவியத்தின் தொடக்கமான ஆற்றுப்படலத்தில் முதல் பாடலாக அவர் கோசல நாட்டின் ஆற்றணியைக் கூறுகிறார். 'ஆசு அலம்புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்.” என்பது கம்பருடைய கவிதையாகும். ஐம்பொறிகள் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்துமாகும் இந்த ஐம் பொறிகளின் செயல்பாடுகள் உணர்தல் சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், ஆகிய ஐந்துமாகும். இவைகளின் மூலம் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய பட்டறிவைப் பெறுகிறோம். இந்தப் பட்டறிவுகளை ஒரு முகப்படுத்தியும் முறைப்படுத்தியும் நமது ஆறாவது அறிவின் மூலம் பகுத்தும் ஆய்வு செய்தும் அனுபவத்தின் மூலம் அறிந்தும் உண்மை அறிவைப் பெறுகிறோம். அந்த உண்மை அறிவும் மேலும் மேலும் விரிவடைகிறது. கூர்மையடைகிறது. இந்த ஐம்பொறிகளின் செயல்பாடுகள் பொதுவாக காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பு பாயும் போது தடுமாறுகின்றன. நிலை குலைகின்றன. அவைகளில் நெறி தடுமாறிப் புறம் செலாதபடி அவைகளைக் கட்டுப்படுத்தி ஒரு முகப்படுத்திச் சரியான வழியில் செல்லவைக்கும் ஒரு சிறந்த ஆட்சி நிர்வாகம் அமைந்துள்ள நாடு கோசல நாடு. மகாகவி பாரதி தனது அச்சமில்லை அச்சமில்லை