பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.Fഞfി |o ΕΙΠΤΕΡΕΙΤ 247 என்னும் பாடலில் 'கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று குறிப்பிடும் வரிகள் இங்கு நினைவு கூறத் தக்கது. கோசல நாட்டின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாக உள்ள ஆற்றின் அணியை இவ்வாறுச் சிறப்பாகக் கம்ப நாடர் விவரித்துக் கூறுகிறார். அவருடைய இந்தப் பாடலின் கருத்தமைவு இராம காதை முழுவதையும் தழுவி நிற்கிறது. கோசல நாட்டின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது கம்பர் "பொற்பின் நின்றன. பொலிவு பொய் இலா நிற்பின் நின்றன நீதி, மாதரார் அற்பின் நின்றன அறங்கள், அன்னவர் கற்பின் நின்றன.காலமாரியே’’ என்று கூறுகிறார். மக்களுடைய நல்ல பண்புகளால் ஒரு நாடு பொலிவு பெறுகிறது. அழகு அடைகிறது. அப்பொலிவும் அழகும் நிலை பெறுகின்றன. மக்களிடம் பொய்களில்லாத நிலைமையினால் நீதி நிலை பெறுகிறது. ஒரு நாட்டின் மாதர்களின் தாய்மை அன்புகளால் அறங்கள் நிலை பெறுகின்றன. அவர்களுடைய கற்பினால் ஒழுக்கம் நிறைந்த நல்ல குணங்களால் பருவமழை நிலை பெறுகிறது. பருவ மழையால் செழிப்பும் செல்வமும் ஓங்குகிறது. அதன் மூலம் கல்வியும் அறிவும் தழைக்கிறது. பொலிவு, நீதி, அறம், கற்பு, செல்வம், கல்வி, அறிவு இவையெல்லாம் மனித சமுதாயப் பண்பாட்டின் அடித்தளங்களாகும். நல்லாட்சியின் அடையாளங்கள் வரி குறைத்தல், அரசின் நிதி சேமிப்புகள் மூலம் நலிந்தோருக்கு உதவிடுதல், படைகளைக் குறைத்தல், அரசியல் காரணங்களினால் சிறையில் உள்ளவர்களின் நிலைமைகளை அவ்வப்போது பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தல், வேதியர்களின் (சான்றோர் அறிஞர் ஆகியோர்) நியமங்கள் சீராக நடைபெறுதல், கல்வி செழித்தல் விழாக்கள் எடுத்தல், ஆலயங்கள் புதுப்பித்தல், அந்தணர்களின் வேள்விகள் சீராக நடத்தல், காலை, மாலைகளில் கோவில்களில் நித்திய பூசைகள் சிறப்பாக நடத்தல், ஆகியவை யெல்லாம் நல்லாட்சிக்கான அடையாளங்களாகும். அப்போது மக்களுடைய கல்வியும் ஒழுக்கமும் சிறந்து ஓங்குகின்றன.