பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் ΧΧΙV 'மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உருவம் மூன்று; மூன்று கண் சுடர்கள் சோதி மூன்று; தன் உலகம் மூன்று தோன்றலும், இடையும், ஈறும், தொடங்கிய பொருள் கட்கெல்லாம் சான்று அவன்; இதுவே வேத முடிவு; இது சரதம், என்றான்” என்று மிகவும் அற்புதமான விளக்கத்தைக் கம்பன் கூறுகிறார். பிரகலாதனுக்கு நரசிம்மன் அருள் பாலித்து வரம் கொடுக்கிறார், “நல்லறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும், எல்லையில் ஞானமும், ஈறு இலா எப்பொருளும், தொல்லை சால் எண் குணனும், நின் சொல் தொழில் செய்க ! மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ! " என்று ஆசீர்வதித்து வாழ்த்துகிறார். இங்கே எண் குணங்கள் என்பது : இயற்கை அறிவு, முற்றும் உணர்தல், தன்வசம், தூய உடல், பாசங்களின் நீங்கல், பேரருள், முடிவில் ஆற்றல், வரம்பில் இன்பம் ஆகியவைகளாகும். இராமன் குகனையும் சுக்கிரீவனையும் வீடணனையும் குல வேறுபாடுகள் இல்லாமல் சகோதரர்களாக ஏற்றான். கம்பன் சாதி வேறுபாடுகளையும் குல வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் ஏற்க வில்லை. அதன் மூலம் மிக உயர்ந்த சமுதாய சமத்துவத்துவத்தை உலகுக்கு அளித்துள்ளான். இராமபிரான் வீடணனைத் தனது நண்பனாக சகோதரனாக ஏற்று 'குகனோடு ஐவர் ஆனோம்; முன்பு பின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த அகன் அமர்காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்; புகன் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.” என்று கூறுகிறான்.