பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 253 திரும்பி வந்து அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் பரதன் கூறுகிறான். அப்போது 'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அர்சின் முந்துமோ?’ என்று கூறுகிறான். o இங்கு நிறை என்பது கற்பு நிலையாகும். கற்பு நிலை நீங்கிய மகளிரின் நீர்மை, பொறை (பொறுமை) நீங்கிய தவம், அருள் நீங்கிய அறம் ஆகியவைகளைக் காட்டிலும் முன்னோர் குறித்த முறையின் நீங்கிய அரசு தீமை மிக்கதாகும் என்று பரதன் இராமனிடம் கூறுகிறான். சூர்ப்பனகை வருகை இராமன் பஞ்சவடியில் தங்கியிருந்தான். அங்கு சூர்ப்பனகை வந்தாள். தொலைவிலிருந்து இராமனைக் கண்டாள். அவனுடைய அழகைக் கண்டு அவள் மயங்குகிறாள். அவளுடைய கற்பு நிலை தேய்கிறது. அவளுடைய உள்ளத்தில் இராமன் மீதான காம உணர்வு மேலோங்குகிறது. அதைக் கம்பர், "நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக் கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான், பொருள் காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்' என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். அவளுடைய கற்றறிவு தேய்கிறது என்று பொருள் கொள்ளலாம் அறிவு மழுங்கி வருகிறது என்று கூறலாம். மாயமான் தோற்றம் மாரீசன் மாயமான் வடிவத்தில் சீதை முன் தோன்றினான். அம்மானைப் பிடிக்க இராமன் வெகு துரம் அதன் பின்னால் சென்று விட்டான். இராமன் கணையால் அடிபட்ட மாரீசன் பெரும் குரலை எழுப்பி சீதா, இலக்குவா, என்று கூறிக் கீழே விழுந்தான். அந்தக் குரலைக் கேட்டுச் சீதை மனம் கலங்கி இராமனைத் தேடிச் செல்லும்படி இலக்குவனை வற்புறுத்தினாள். -