பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 254 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் இலக்குவன் எவ்வளவோ சொல்லியும் சீதை ஏற்காததால் அவன் இராமனைத் தேடிச் சென்றான். அந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராவணன் தவத்தவர் வடிவு தாங்கிச் சீதையைக் காணச் சென்றான். 'அந்தப் பொற்பினுக்கு அணியினை கற்பினுக்கு அரசியைக் கண்ணின் நோக்கினான்’ என்று இராவணன் சீதையை நேரில் கண்டதைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். இராவணத் துறவி காமன் வெம்சரம் படக் கருகும் மேனியான், “வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் அற்பின் நல்திரை புரண் ஓசை வேலையன் பொற்பினுக்கு அணியினைப், புகழின் சேர்க்கையை கற்பினுக்கு அரசியைக் கண்ணின் நோக்கினான்' என்று கம்பர் கூறுகிறார். துறவியைக் கண்ட சீதை அவனை அமரும்படி கூறினாள். ஆசனம் கொடுத்தாள் “ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல் மூண்டெழு சிந்தனை முறையிலோன் தனைக் காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் ஈண்டெழுந்தருளும்? என்று இனிய கூறினாள்' என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். இன்னும் இந்தக் காட்சியில் சீதையைப் பற்றிக் குறிப்பிடும போது 'துமனத்து அருந்ததி' என்றும் “கற்பினுக்கு அரசியை’ என்றும் 'கண்ணி துடைத்த கற்பினாள்’ என்றும், அத்துடன் 'மறுவில் கற்பினாள் என்றும் ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலேயாம்' என்றும் குறிப்பிடுகிறார் கம்பநாடர். சீதையைத் துக்கிச் சென்றான் இராவணன் ஆகாய மார்க்கமாகச் சீதையைத் துக்கிக் கொண்டு செல்லும் போது வழியில் அதைக் கண்ட சடாயு, அரக்கனைத் தடுத்தான் இருவருக்கும் கடும் போர் நடந்தது. கடைசியில் இராவணன் தனது சக்தி மிக்க தெய்வீக வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி அவனை வீழ்த்திவிட் பன். அவன்