பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XXV குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணத்தைப் படைத்தேன் என்றான் கண்ண பெருமான் வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா’’ என்றும், 'தக்க இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே: மனுவின் நெறி புக்க வேல் அவ்விலங்கும் புத்தேளிரே' என்றும் மிகவும் தெளிவுபடக் கம்பநாடர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்தே பாரதியும் தனது கண்ணன் பாட்டில் 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப்புரிந்தனர் மூட மனிதர் சிலம் அறிவுதர்மம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம், என்று கூறுகிறார். இவையெல்லாம் வாழையடி வாழையாக நமது சீரிய மரபு வழியில் வந்த சிறந்த கருத்துக்களாகும். வானர சேனை கடலைக் கடக்க வேண்டும் கடலை வழிவிடும் படி வேண்டி இராமன் கடற்கரையில் அமர்ந்து வர்ண ஜபம் செய்தான். ஏழு தினங்கள் ஆகியும் வருணன் வரவில்லை. இராமன் கோபம் கொண்டான். எனது வில்லில் பலமில்லை, இராவணனுடைய செய்கையால் எனது தாரத்தை இழந்துள்ளேன். என்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லை. எனவே அவன் பலமில்லாதவன், வீரமில்லாதவன் என்று வருணன் இகழ்ச்சியாக என்னைக் கருதுகிறானா? என்று கூறிக் கோபத்தோடு தனது வில்லை எடுத்தான், 'பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையான், ஆதலின், தகைசால் வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் வினைய ஈரம் நீங்கியது எறிகடல் ஆம்; என இசைத்தான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். செல்வமும் செல்வாக்கும் இருந்தால் யாரும் நம்மைச் சுற்றுவார். இல்லாவிட்டால் நமது சொல் ஏறாது என்னும் கருத்தை இங்கே கம்பன் குறிப்பிடுகிறார். இராமன் கோபத்துடன் தனது வில்லை எடுத்து நாணேற்றினான், அப்போது வருணன் பயந்து போய் இராமனிடம் ஒடிவருகிறான்.