பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 260 الحجدلإح காதலும் பெருங்காதலும் சீதையைத் தேடி சீதையைத் தேடி, சுக்கிரீவன் ஆணைப்படி வானரப் படைத் தலைவர்கள் பலரும், பல திசைகளிலும் சென்றனர். அங்கதன், மாருதி, சாம்பவன் ஆகியோர், தங்கள் துணைப் படைகளுடன் தென்திசை நோக்கிச் சென்றனர். பல ஆறுகளையும், மலைகளையும், நாடுகளையும் கடந்து மகேந்திர மலையை அடைந்தனர். எங்குதேடியும் சீதையைக் காணவில்லை. என்ன செய்வது என்று அறியாது சோர்வடைந்து புலம்பினர். "யாவரும் அவ்வயின் எளிதின் எய்தினார், பூவரு புரிகுழல் பொருவில் கற்புடைத் தேவியைக் காண்கிலார்; செய்வது ஒர் கிலார்; நாவியல் குழறிட நவில்கின்றார்; அரோ!' என்று கம்பர் குறிப்பிடுகிறார். இலங்கையில் அனுமன் அனுமன் இலங்கையை அடைந்தான். அந்நகரின் வளத்தையும் அரக்கர்களின் ஆனந்த வாழ்வையும், படை பலத்தையும் கோட்டையின் வலிமையையும் கண்டான். அவற்றையெல்லாம் கண்டும் அதிசயித்துப் பலவும் எண்ணித் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு ஒரு குன்றின் ஒரத்தில் இருந்தான். கதிரவனும் மறைந்தான். இருள் பரவியது அதைப் பற்றி, 'வண்மை நீங்கா நெடுமரபின் வந்தவள் பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் திண்மை நீங்காதவன் சிறைவைத்தான், எனும் வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே' என்று இருள் பரவியது பற்றிக் கம்பர் பிரான் குறிப்பிடுகிறார். அனுமன் இலங்கை நகருக்குள் சென்று சீதையைப் பல இடங்களிலும் தேடினான். கும்பகருணன் மாளிகை, விடணன் இல்லம் மற்றும் இந்திர சித்தன், அக்கன், அதிகாயன் ஆகியோர் தங்கள் தங்கள் மாளிகைகளில் உரங்கிக் கொண்டிருந்த காட்சிகள் முதலியவற்றைக் கண்டான். மண்டோதரி அவளுடைய மாளிகையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். இராவணன் மாளிகையைக்