பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ഴഞ്ഞി o - -- அ.சீனிவாசன் 265 'கட்டேறு நறும் கமழ் கண்ணி இக்காளை, என்கைப் பட்டால், அதுவே அவ்விராவணன் பாடும் ஆகும்; கெட்டோம்; என எண்ணி, இக்கேடு அரும் கற்பினாளை விட்டு ஏகும்; அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார்,' என்று தனக்குள் எண்ணினான். இந்திரசித்தன் அனுமனை நான்முகன் படையால் கட்டினான். கட்டுண்ட அனுமனை அரக்கர் படை வீரர்கள், இராவணனுடைய சபைக்கு இழுத்துக் கொண்டு சென்றனர். அவனும் அமைதியாக அரக்கனுடைய சபைக்குச் சென்றான். அப்போது இலங்கை வாழ் மக்கள் பலரும், “கையிலை யின்ஒருதனிக் கணிச்சி வானவன் மயில் இயல் சீதை தன் கற்பின் மாட்சியால் எயில் உடைத் திரு நகர் சிதைப்ப, எய்தினன் அயில் எயிற்று ஒரு குரங்காய்; என்பார் பலர்” என்று கம்பர் குறிப்பிடுகிறார். அனுமன் பிடிபட்டதைக் கேட்டுச் சீதை மிக்க துயரமடைந்தாள் 'ஏயப்பன்னினள் இன்னை; தன் உயிர் தேயக், கன்று பிடியுறத் தீங்க உறும் தாயைப் போலத் தளர்ந்து மயங்கினாள் தீயைச் சுட்டது ஒர்கற்பு எனும் தீயினாள்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். இராவணன் தனது அரியாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான். அதை அனுமன் தன் கண்களால் நேருக்கு நேராகக் கண்டான். அப்போது தசமுகனுடைய ஒவ்வொரு முகமும் எவ்வாறு காட்சியளித்தது என்பதைக் கம்பன் மிக அற்புதமாக வடித்துக் காட்டுகிறார். அதில் “காந்தள் மெல்விரல் சானகி தன் கற்பு எனும் கடலை நீந்தி ஏறுவது எங்ங்ண் என்று ஒரு முகம் நினையச் சாந்து அளாவிய கோதை நன் மகளிர் தற்சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் ஒரு முகம் இயல்புடன் இலங்க” என்று கம்பன் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.