பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 266 تدخلإصحاح காதலும் பெருங்காதலும் இராவணன் சபையில் அனுமன் இராமனுடைய தூதனாகப் பேசிய உரை மிகச் சிறந்த இலக்கியமாகும். அனுமன அரக்கனுக்கு அறிவுரை கூறுகிறான். 'போய் இற்றிர்! நும் புலன் வென்று போற்றிய ஆலாயின் தீர்வு அரிது ஆகிய மாதவம்; காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் தீயின் துயவளைத் துயர் செய்ததால்’’ என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு பல அறிவுரைகளைக் கூறியதைக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இராவணனுக்கு அனுமன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட போது கடுங்கோபம் ஏற்பட்டது. கடைசியில் அனுமன் வாலிலே துணியைச் சுற்றி அதில் நெய்யை ஊற்றி நெருப்பிட்டுத் துரத்தும்படி அரக்கன் ஆணையிட்டான். அரக்கர்களும் அவ்வாறே செய்து விட்டு ஆரவாரமும் செய்தனர். சீதை அதைக் கேள்விப்பட்டு துயரம் அடைந்தாள். “தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவு இல்லா நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால் நல்காயோ, நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும், கற்பு; அதனில் தூயேன் என்னின் தொழுகின்றேன், எளியே அவனைச் சுடல்' என்றாள் தீ அனுமனைச் சுடவில்லை அனுமனும் 'வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி, வெம் தீ நிற்பினும், சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி அற்பினால் அறாத சிந்தை அனுமனும், சனகன் பாவை கற்பினால் இயன்றது என்னப் பெரியது ஒர் களிப்பன் ஆனான்” இலங்கை பற்றி எரிந்தது. சீதை இருந்த அசோக வனத்தின் பக்கம் மட்டும் தீ செல்லவில்லை.