பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 269 அனுமன் இந்தக் காட்சியில் சீதா பிராட்டியைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசுவதைக் காண்கிறோம். “கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’’ என்றும் 'என்பெரும் தெய்வம்' என்றும் 'உன்பெரும் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் தனையை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்' என்றும், இன்னும் உன்குலம் உன்னதாக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய தன்குலம் தன்னது ஆக்கித் தன்னை இத் தனிமை செய்தான் வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து என் குலம் எனக்குத் தந்தாள் என்றும், “கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்’ என்றும் தவம் செய்த தவமாம் தையல்’ என்றும் “வான் உயர் கற்பினாள்’ என்றெல்லாம் பெருமைப்படுத்திக் கூறுகிறான் வேத நன்னூல் உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் என்று புகழப்படும் அனுமன் என்பான். இவ்வாறாக இந்த அற்புதமான காட்சியில் சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பை முழுமையாகக் காட்டுகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பநாடர். இராவணன் மந்திரப் படலம் சபா மண்டபத்தில் இராவணன் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறான். மந்திராலோசனை நடைபெறுகிறது. இராவணனுடைய நெருக்கமான உறவினர்கள், சேனைத் தலைவர், முதலமைச்சர் மற்றும் சிலரும் சபையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கும்பகருணன் இந்திரசித்தன் முதலமைச்சன் மகோதரன், சேனைத் தலைவர்கள் மற்றும் சிலரும் பேசுகிறார்கள். இந்திரசித்தன் பேசும் போது 'நீரும் நிலனும், நெடியகாலும், நிமிர்வானும் பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடை பெயர்த்தே யாரும் ஒழியாமை, நரர் வானரரை யெல்லாம் வேறும் ஒழியாத வகை கொன்று அலது மீளேன்' என்று வீரம் பேசுகிறான். அதைக் கண்டித்து வீடணன் பேசுகிறான்.