பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 270 “நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை போலுமால், உறுபொருள் புகலும் பூட்சி யோய்! காலம், மேல் விளை பொருள் உணரும் கற்பு இலாப் பால நீ! இணையன பகரல் பாலையோ?” என்று அவன் பேச்சை மறுத்துப் பேசினான். இங்கு கற்பு இலா என்னும் சொல் கல்வி அறிவு இல்லாத என்று பொருள் படுகிறது. கற்பு, கற்றல், கற்பித்தல், கல்வி, கற்பனை முதலிய சொற்கள் கற்பு என்னும் சொல்லுடன் தொடர்பு கொண்டவைகளாக உள்ளதைக் காண்கிறோம். இதே போல வசிட்டன் தசரதனைப் பற்றிக் குறிப்பிட்டபோது மறுவறு கற்பினில் என்னும் சொற்கள் குற்ற மற்ற கல்வி கேள்விகளால் என்னும் பொருளில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இன்னும் சூர்ப்பணகையைப் பற்றிக் குறிப்பிடும் போது தேயும் கற்பினாள் என்று கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு தேயும் கற்பினாள் என்பது கற்றறிவும் தேய்கிறது, அறிவு மழுங்கி வருகிறது என்னும் பொருளில் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். வீடணன் இராமனிடம் சேர்தல் இராவணனுடைய சபையில் வீடணன் பேசினான். அவன் மிகவும் அடக்கமாக 'கோநகர் முழுவதும் நினது கொற்றமும் சானகி எனும் பெயர், உலகின் தம்மனை ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ’’ எனறும “தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள் வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ? நோய் உனக்குயான்' என நுவன்றுளாள், அவள் ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்' என்றும் கூறுகிறான். கடைசியாக 'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச