பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 272 >}=== காதலும் பெருங்காதலும் "கிட்டியதோ செருக் கிளர் பொன் சீதையைச் சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வன்மையோ?” என்றும் கூறினான். பிரம்மாஸ்திரம் இந்திரசித்தன் பிரம்மாஸ்திரத்தை ஏவி இலக்குவனையும் மற்றும் வாணர வீரர்களையும் விழ்த்தி விட்டான். இராமன் போர்க்களத்திற்கு வந்து பார்த்த போது அனைவரும் வீழ்ந்து கிடப்பதைக் கண்டான். அவனும் மயங்கி விழுந்தான். அச்சமயம் இராவணனுடைய படையின் தூதர்கள் சென்று “உன் மகனால் இளையோன் மாண்டான். அதைக் கண்டு இராமனும் உயிர் விட்டான். உன் எதிரிகள் ஒழிந்தனர்” என்று இராவணனிடம் கூறினர். இராவணன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். தனது ஆட்களை அழைத்துப் போர்க்களத்தில் உள்ள அரக்கர் பிணங்களையெல்லாம் அகற்றி விட்டுச் சீதையை விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய்ப் போர்க் களத்தைக் காட்டும்படி கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறே செய்தனர். இராமனும் இலக்குவனும் மற்றும் வானர வீரர்களும் வீழ்ந்து கிடப்பதைச் சீதை விமானத்திலிருந்து கண்டாள். துக்கம் தாங்க முடியாமல் அவள் தனது கணவன் மீது கீழே விழுந்து உயிர் விட முனைந்தாள். உடனே திரிசடை அவளைத் தடுத்துப் பிடித்துக் கொண்டு கூறினாள், திரிசடை வீடணனுடைய மகள். சீதைக்குக் காவலாகவும் அவளுக்கு ஆதரவாகவும் இருந்த நல்லாள். சீதையிடம், திரிசடை, இவையெல்லாம் அவர்களுடைய மாயச் செயல்களின் தொடர்ச்சியே யாகும். நீ ஒன்றும் அஞ்ச வேண்டாம். உனது கற்பு நிலை தர்மத்தைத் தாங்கும். உனது கற்புக்கு அழிவில்லை” என்று கூறி அவளைத் தேற்றினாள். "மாயமான் விடுத்த வாறும், சனகனை வகுத்த வாறும்